இயக்குனர் ராம் இயக்கத்தில் ஜியோ ஹாட்ஸ்டார், ஜி கே எஸ் ப்ரோடுக்ஷன், செவன் சீஸ் மட்டும் செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் பறந்து வா. இந்த திரைப்படம் வருகின்ற ஜூலை நான்காம் தேதி ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தில் சிவா மற்றும் அஞ்சலி ஆகியோர் நடித்துள்ள நிலையில் அவர்களுடைய இணைந்து கிரேஸ் ஆண்டனி மற்றும் அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். இயக்குனர் ராம் படம் என்றாலே அதில் யுவன் சங்கர் ராஜா இசை என்பது எழுதப்படாத ஒன்றுதான். ஏனென்றால் இதுவரை ராம் இயக்கிய அனைத்து திரைப்படங்களுக்கும் யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்துள்ளார்.
![]()
ஆனால் இந்த படத்தில் இவன் பணியாற்றாதது ஏன் என்பதற்கு படத்தின் விழாவில் இயக்குனர் ராம் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து பேசிய ராம், எனக்கு தினம் தினம் யுவன் சங்கர் ராஜா ரசிகர்களிடமிருந்து கெட்ட வார்த்தைகளில் மெசேஜ் வருகின்றது. அவர்களுக்கு எல்லாம் நான் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இந்த படத்திற்கு முதலில் இசையமைக்க யுவன் தான் ஒப்பந்தமானார். அதற்காக அவருக்கு முன் பணம் கொடுக்கப்பட்டது.

ஆனால் திடீரென ஒரு நாள் மதம் கார்க்கி இந்த படத்தில் அதிக பாடல்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார். அதேசமயம் படத்தை திரைப்பட விழாவுக்கு அனுப்ப வேண்டிய சூழலும் ஏற்பட்டிருந்தது. ஆனால் அந்த சமயத்தில் இவன் வேறு சில படங்களில் பிசியாக பணியாற்றிக் கொண்டிருந்தார். அதனால் அவரால் பாடல்களுக்கு மட்டுமே இசையமைக்க முடியவில்லை. பின்னணி இசையை நான் செய்து கொண்டிருக்கிறேன் என்று யுவன் கூறியதால் சந்தோஷ் தயாநிதி இந்த படத்தின் பாடல்களை தயார் செய்து கொடுத்தார் என்று இயக்குனர் ராம் விளக்கம் அளித்துள்ளார்
