கொம்பு சீவி பட குழுவினருக்கு புத்தாடை வழங்கி பிரியாணி விருந்து வைத்த சின்ன கேப்டன்.. வைரலாகும் புகைப்படங்கள்..!

By Nanthini on ஆனி 14, 2025

Spread the love

மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் ஏற்கனவே இரண்டு திரைப்படங்களில் நடித்துள்ளார். பலவருடன் இடைவேளைக்கு பிறகு படைத்தலைவன் திரைப்படத்தில் தற்போது நடித்துள்ளார்.

   

இந்தத் திரைப்படத்திற்காக பல கஷ்டங்களையும் அவர் சந்தித்துள்ளார். பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.

   

 

விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு நடிகர் விஜய் நடிப்பில் உருவான கோட் திரைப்படத்தில் ஏஐ வடிவத்தில் விஜயகாந்தை கொண்டு வந்திருந்தனர். ஆனால் அது சரியாக இல்லை என்பது பலருடைய கருத்தாக இருந்தது.

இதனிடையே படைத்தலைவன் படத்தில் விஜயகாந்த் தத்ரூபமாக கொண்டுவரப்பட்டுள்ளார். இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். அதேசமயம் இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருந்த நிலையில் படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை பாராட்டு கலை பெற்று வருகிறது.

விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் சண்டை காட்சிகள் அப்படியே அவருடைய அப்பாவை போலவே ரசிகர்களை கவர்ந்துள்ளது. அதிலும் ஒரு சண்டைக் காட்சிக்கு பொட்டு வச்ச தங்க குடம் என்ற பாடல் வருவது படத்திற்கு மேலும் சிறப்பாக அமைந்துள்ளது.

இப்படி தொடர்ந்து படைத்தலைவன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து சண்முக பாண்டியன் கொம்பு சீவி என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் படபிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் முழு படக்குழுவினருக்கும் சின்ன கேப்டன் சண்முக பாண்டியன் புதிய ஆடைகள் வாங்கிக் கொடுத்த பிரியாணி விருந்து வைத்து அசத்தியுள்ளார். அதை தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.