இன்றைய காலகட்டத்தில் மோசடிகள் அதிகரித்து வருகிறது. மக்களை ஏதாவது ஒரு தகவலை சொல்லி ஏமாற்றி வருகிறார்கள். இதனால் ஒரு சிலர் நம்பியும் விடுகிறார்கள். இதுகுறித்து அரசு அப்போது எச்சரிக்கை விடுத்தும் வருகிறது. அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இன்போசிஸ் முன்னாள் தலைமை செயல் அதிகாரி என்.ஆர் நாராயணமூர்த்தி ஆகியோர் 21 ஆயிரம் முதலீடு செய்து மாதம் 15 லட்சம் வரை சம்பாதிக்கலாம் என்று கூறுவதாக ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
ஒரு நாளில் இத்தனை லட்சம் கிடைக்கிறதா? என்று குறிப்பிட்டு பலரும் இதை பகிர்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் இது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்து இருக்கிறது. அதாவது அந்த பதிவில் பிரதமர் நரேந்திர மோடி 21,000 முதலீடு செய்து மாதம் 15 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்க மக்களை வலியுறுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது AI தொழில்நுட்பத்தில் மாற்றியமைக்கப்பட்ட போலி வீடியோ இதுபோன்ற மோசடிகளில் யாரும் சிக்கி ஏமாற வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.
