“டீச்சர், நான் அழுகல கண்ணு வேர்க்குது”… பள்ளியில் அழுது கொண்டே க்யூட்டாக சிரித்த சிறுமி… இணையத்தை ஆக்கிரமிக்கும் வைரல் வீடியோ…!

By Nanthini on புரட்டாதி 5, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. இதில் சில வீடியோக்கள் நம்மை கவரும் வகையில் மனதிற்கு நெருக்கமானதாக இருக்கும். குறிப்பாக குழந்தைகள் குறித்த வீடியோக்கள் அதிகம் பகிரப்படுவதால் அதனை ரசிப்பதற்கு தனி ஒரு கூட்டம் உள்ளது. பொதுவாகவே எந்த இடத்தில் குழந்தைகள் இருந்தாலும் அந்த இடம் அப்படியே மகிழ்ச்சியாக மாறிவிடும். குழந்தைகள் செய்யும் சிறு சுற்றித்தனங்கள் கூட நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் தான் இருக்கும். அவர்கள் செய்யும் சில செயல்கள் வெறுப்பை உண்டு பண்ணாலும் அதில் கொஞ்சம் சேட்டை நிறைந்து இருக்கும். அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதன்படி தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கும் ஒரு வீடியோவில் சிறுமி பள்ளியில் தனது அம்மா வேண்டும் என்று அடம் பிடிக்கிறார். அங்கு இருக்கும் ஆசிரியர் நீ அழுகக்கூடாது என்று சொல்ல நான் அழுகல என்று சொல்லி அழுதப்படியே சிரிக்கிறார். இந்த க்யூட்டான காட்சி பலருடைய மனதையும் கவர்ந்துள்ளது. தற்போது அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.