இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. இதில் சில வீடியோக்கள் நம்மை கவரும் வகையில் மனதிற்கு நெருக்கமானதாக இருக்கும். குறிப்பாக குழந்தைகள் குறித்த வீடியோக்கள் அதிகம் பகிரப்படுவதால் அதனை ரசிப்பதற்கு தனி ஒரு கூட்டம் உள்ளது. பொதுவாகவே எந்த இடத்தில் குழந்தைகள் இருந்தாலும் அந்த இடம் அப்படியே மகிழ்ச்சியாக மாறிவிடும். குழந்தைகள் செய்யும் சிறு சுற்றித்தனங்கள் கூட நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் தான் இருக்கும்.
அவர்கள் செய்யும் சில செயல்கள் வெறுப்பை உண்டு பண்ணாலும் அதில் கொஞ்சம் சேட்டை நிறைந்து இருக்கும். அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது சிறுமி ஒருவர் அண்ணனை ஆன்லைனில் ஆர்டர் செய்து தருமாறு தனது தாயிடம் அடம் பிடித்து கொண்டிருக்கிறார். அது தொடர்பான காட்சிதான் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்தப் பதிவைக் காண்க
