“டேய் என்னடா பண்ற”, பரபரப்பான சந்தையில் மனைவியை கொடூரமாக சுட்டுக்கொன்ற கணவன்… அதிர்ச்சியூட்டும் வீடியோ…!

By Nanthini on புரட்டாதி 5, 2025

Spread the love

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள ஒரு பரபரப்பான சந்தையில் கணவர் ஒருவர் தன்னுடைய மனைவியை கொடூரமாக சுட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமை இரவு 8 மணி அளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்தவர் கஜ்னி பகுதியை சேர்ந்த மம்தா சவுகான் என்பது தெரியவந்துள்ளது. அவருடைய கணவர் விஸ்வகர்மா சவுகானை போலீசார் கைது செய்துள்ளனர்.

குடும்பத் தகராறு காரணமாக இந்த கொலை நடந்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த தம்பதியினர் ஒன்றரை வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகள் உள்ளார். கணவன் மனைவி இருவருக்கான விவாகரத்து வழக்கை நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த மம்தா தன்னுடைய மகளுடன் தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ஸ்டூடியோவில் புகைப்படம் எடுக்க வீட்டை விட்டு வெளியில் வந்த மம்தாவை கணவர் பின் தொடர்ந்து சென்றுள்ளார்.

   

அவர் ஸ்டூடியோவுக்குள் சென்று வெளியே வந்ததும் அவரை வழிமறித்து விஸ்வகர்மா வாக்குவாதம் செய்த நிலையில் ஒரு கட்டத்தில் தனது கையில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். உடனே அங்கிருந்தவர்கள் மம்தாவை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் உயிரை காப்பாற்ற முடியவில்லை. தற்போது அது தொடர்பான காட்சியை இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.