உருளைக்கிழங்கு சிப்ஸ் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அலாதி பிரியம். ஆனால், ஒரு தொழிற்சாலையில் சிப்ஸ் தயாரிக்கப்படும் விதம் குறித்து இணையத்தில் வெளியாகியுள்ள வீடியோ பார்ப்போரை முகம் சுளிக்க வைத்துள்ளது. இந்த வீடியோவில், சுகாதாரமற்ற ஒரு தொழிற்சாலையில் உருளைக்கிழங்குகள் மிகவும் அசுத்தமான சூழலில் கையாளப்படுவதைக் காண முடிகிறது. குறிப்பாக, தொழிலாளர்கள் சுகாதார விதிகளைப் பின்பற்றாமல், அழுக்கு படிந்த தண்ணீரில் உருளைக்கிழங்குகளைக் கழுவுவதும், அசுத்தமான கைகளால் அவற்றை கையாளுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், “இனிமேல் சிப்ஸ் சாப்பிடும்போது யோசிக்க வேண்டும்” என்றும், “இது சிப்ஸ் தொழிற்சாலையா அல்லது சாக்கடையா?” என்றும் காட்டமாக விமர்சித்து வருகின்றனர். உணவுப் பாதுகாப்புத் துறையின் எந்தவிதக் கட்டுப்பாடும் இன்றி இத்தகைய உள்ளூர் நிறுவனங்கள் செயல்படுவது பொதுமக்களின் உடல்நலத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. கவர்ச்சிகரமான பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு வரும் உணவுகள் எவ்வளவு ஆபத்தானவை என்பதற்கு இந்த வைரல் வீடியோ ஒரு சாட்சியாக அமைந்துள்ளது.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…