நாடு முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மகாராஷ்டிரா, மும்பை, நாசிக் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரம்மாண்டமாக விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. சிலைகளுக்காக அலங்கார பந்தல்கள் அமைக்கப்பட்டு விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி பந்தலில் உள்ள விநாயகர் சிலை ஒன்றின் கையில் பூனை அமைதியாக படுத்து தூங்கக்கூடிய ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோவில் விநாயகர் சிலையின் கையில் பூனை தூங்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையவாசிகளை அதிகம் கவர்ந்துள்ளது.
Instagram இல் இந்தப் பதிவைக் காண்க
