CINEMA
சிக்கலில் இருக்கும் விடாமுயற்சி படம்.. அதுக்கு காரணமே இயக்குனர் தானா..? என்னப்பா சொல்றீங்க..!!
பிரபல நடிகரான அஜித் மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்துள்ளார். கடந்த வருடம் மே மாதமே அஜித் பிறந்தநாளை முன்னிட்டு அந்த படத்தின் அறிவிப்பு வெளியானது. ஆனால் ஷூட்டிங் தொடங்க பல மாதங்கள் தாமதமானது. விடாமுயற்சி படத்தின் 70 சதவீத ஷூட்டிங் வைத்து நடைபெற்றது.
அதன் பிறகு ஒரு சில காரணங்களால் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போனது. இதற்கிடையே விடாமுயற்சி பட ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரலானது. இந்த நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிக்க அஜித் கமிட்டானார். அந்த படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோதே மீண்டும் விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் தொடங்கியது.
இதனால் ஒரு மாதமாக அஜித் 16 முதல் 20 மணி நேரம் இரண்டு படங்களின் ஷூட்டிங்கும் மாறி மாறி பங்கேற்றுள்ளார். தற்போது விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் மொத்தமாக முடிவடைந்தது. இந்த நிலையில் விடாமுயற்சி படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்து வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இயக்குனர் மகிழ் திருமேனி விடாமுயற்சி படத்தின் பிற பணிகளை முடிக்க நேரம் வேண்டும் என கூறுகிறாராம்.
இதனால் டிசம்பர் மாதம் 20-ஆம் தேதி அல்லது பொங்கலை முன்னிட்டு படம் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது. ஆரம்பத்தில் இருந்து பட்ஜெட் பிரச்சனை, படபிடிப்பு தள்ளிப் போவது என அடுத்தடுத்த சிக்கல்கள் வந்து கொண்டே இருந்தது. இப்போது ரிலீஸ் செய்வதும் காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் அஜித் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.