CINEMA
பிரபல தயாரிப்பாளருக்கு போக்கு காட்டும் தனுஷ்.. அதுக்கு அவர் சொல்லுற காரணம் இருக்கே..!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். கடைசியாக தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்தப் படம் தனுஷின் ஐம்பதாவது திரைப்படம். ராயன் திரைப்படத்தில் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். இதுவரை 150 கோடி ரூபாய் வரை ராயன் திரைப்படம் வசூல் செய்ததாக தெரிகிறது. இதனால் கலாநிதி மாறன் தனுஷுக்கு இரண்டு காசோலைகளை கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து தனுசுக்கு ரெட் அலர்ட் போட வேண்டும் என்ற பேச்சு அடிபட்டது. தயாரிப்பாளர் முரளி ராமசாமியுடன் இணைந்து தனுஷ் ஒரு படத்தில் நடித்துள்ளார். அந்தப் படத்திற்காக தயாரிப்பாளர் முரளி ராமசாமி ஒரு தொகையை செலவழித்துள்ளார். இதேபோல தனுஷும் ஒரு குறிப்பிட்ட தொகையை செலவு செய்துள்ளார். ஆனால் ஒரு சில காரணங்களால் அந்த படம் பாதியிலேயே கைவிடப்பட்டது.
இந்த நிலையில் தனுஷை சுற்றி இருக்கும் நபர்கள் முரளி ராமசாமியுடன் பிரச்சனை வேண்டாம். அந்த படத்தை நடித்து கொடுத்து விடுங்கள் என கூறுகிறார்களாம். அதற்கு தனுஷ் சம்மதம் தெரிவிக்கவில்லை. மிகவும் தயக்கம் காட்டுகிறார். அதுக்கு ஒரு காரணம் இருக்கிறதாம். அந்த படம் பாதி எடுக்கப்பட்டது. மீதி படத்தை இப்போது தொடர்ந்தால் நினைத்த அளவு படம் வராது என தனுஷ் நினைக்கிறாராம். ஏனென்றால் ஏற்கனவே எடுக்கப்பட்ட அந்த படத்தின் காட்சிகள் இப்போது ரிலீசாகும் ஒரு சில படங்களில் இருப்பதாக தனுஷ் கூறுகிறாராம்.
அப்படி முரளி ராமசாமி படத்தில் நடித்து அது ரிலீஸ் ஆனாலும் மக்கள் அதனை காப்பி என்று தான் கூறுவார்கள் என நினைத்து தனுஷ் தயக்கம் காட்டுகிறாராம். சொந்த ஐடியா இருந்தால் யோசிக்க வேண்டியதில்லை. தனுஷே பல படங்களின் இன்ஸ்பிரேஷனை வைத்து தான் எடுத்திருப்பார். மற்றவர்களும் அதைத்தான் செய்வார்கள். அப்படி இருக்கும் போது ஒரே காட்சிகள் பல படங்களில் வர வாய்ப்பு இருக்கிறது என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.