பிரபல நடிகரான விஜய் சேதுபதி நடிப்பில் கடைசியாக மகாராஜா திரைப்படம் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆனது. விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமான மகாராஜா ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்று வசூல் சாதனை படைத்தது. வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி,சூரி நடித்த விடுதலை படம் சூப்பர் ஹிட் ஆனது. அந்த படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்க திட்டமிட்டனர். இதற்காக பல லட்சங்களை செலவு செய்து செட் அமைக்க தயாராக இருந்தனர்.
ஆனால் இன்னும் ஒரு சில வாரங்களில் மழை வருவதற்கு வாய்ப்பு இருப்பதால் செட் போட்டு வீணாகிவிடும் என்பதற்காக படத்தின் ஷூட்டிங் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரபல இயக்குனரான பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி தனது அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்கிறார். சமீபத்தில் தான் நித்யா மேனனுக்கு திருசிற்றம்பலம் படத்தில் நடித்ததற்காக தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.
பாண்டிராஜ் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி பரோட்டா மாஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் தான் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. ஆனால் வெற்றிமாறன் இயக்கம் விடுதலை 2 படத்தின் ஷூட்டிங் தொடங்கி விட்டால் அங்கு சென்று விடுவேன் என முன்னதாகவே விஜய் சேதுபதி கூறிவிட்டாராம்.
இதனால் விஜய் சேதுபதி இல்லாவிட்டாலும் மற்ற கதா பாத்திரங்கள் வரும் காட்சிகளை எடுத்து முடித்து விடலாம் என பாண்டியராஜ் ப்ளான் செய்துள்ளாராம். பாண்டியராஜ் விஜய் சேதுபதி வைத்து 25 நாட்கள் ஷூட்டிங் நடத்த திட்டமிட்டுள்ளார். அது நல்லபடியாக நடக்குமா என்பது வெற்றிமாறன் கையிலும் உள்ளது.