பிரபல நடிகரான அஜித் மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்துள்ளார். கடந்த வருடம் மே மாதமே அஜித் பிறந்தநாளை முன்னிட்டு அந்த படத்தின் அறிவிப்பு வெளியானது. ஆனால் ஷூட்டிங் தொடங்க பல மாதங்கள் தாமதமானது. விடாமுயற்சி படத்தின் 70 சதவீத ஷூட்டிங் வைத்து நடைபெற்றது.
அதன் பிறகு ஒரு சில காரணங்களால் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போனது. இதற்கிடையே விடாமுயற்சி பட ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரலானது. இந்த நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிக்க அஜித் கமிட்டானார். அந்த படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோதே மீண்டும் விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் தொடங்கியது.
இந்த நிலையில் விடாமுயற்சி படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்து வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் விடாமுயற்சி படத்தை ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. படத்தின் ஒரு பாடல் காட்சியை மட்டும் எடுக்க வேண்டி இருக்கிறதாம். அதற்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளனர். படத்தின் ரிலீஸ் பற்றி இயக்குனரிடம் கேட்டதற்கு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி செய்கிறோம் என கூறியுள்ளார்.
ஆனால் பாடல் காட்சியை எடுக்க தாமதமாகும் பட்சத்தில் படம் டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது. இதற்கிடையே துபாயில் நடைபெற்ற சைமா விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற நடிகர் அர்ஜுன் விடாமுயற்சி திரைப்படம் டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆகும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும். எது எப்படி இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் மட்டுமே படத்தின் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்படும்.