தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் தனுஷ். தற்போது இயக்குனராகவும் உருவெடுத்து இருக்கிறார். நடிகர், இயக்குனர் மட்டுமல்லாமல் தனுஷ் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணி பாடகர், திரைப்பட பாடல் ஆசிரியர், திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவரது தந்தை கஸ்தூரிராஜா ஒரு இயக்குனர் மற்றும் இவரது சகோதரர் இயக்குனர் செல்வராகவன் என்பது குறிப்பிடத்தக்கது.
2002 ஆம் ஆண்டு துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான தனுஷ் அதற்கு பிறகு காதல் கொண்டேன், திருடா திருடி, சுள்ளான், புதுப்பேட்டை, பொல்லாதவன், ஆடுகளம், 3, வேலையில்லா பட்டதாரி, மாரி, அசுரன், வேங்கை போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் தனுஷ்.
50 திரைப்படங்களில் நடித்த நடிகர் தனுஷ் தனது நடிப்பிற்காக 14 தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள், ஒன்பது விஜய் விருதுகள், 7 தென் இந்திய பிலிம்பேர் விருதுகள், ஐந்து விகடன் விருதுகள், ஐந்து எடிசன் விருதுகள், நான்கு தேசிய திரைப்பட விருதுகள் ஆகிய விருதுகளை வென்றிருக்கிறார்.
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆன ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தை 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்திரா மற்றும் லிங்கா என இரு மகன்கள் இருக்கின்றனர். இரண்டு வருடங்களுக்கு முன்பு தனுஷும் ஐஸ்வர்யாவும் கருத்து வேறுபாட்டால் ஒருமனதாக பிரிந்ததாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் இவர்கள் இணை போகிறார்களா என்று புது செய்திகள் இணையத்தில் பரவி வருகின்றன.
அதற்கு காரணம் என்னவென்றால் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றினால் உடனே தனுஷ் சென்று லைக் போடுகிறாராம். ஆரம்பத்தில் மகன்களோடு இருக்கும் புகைப்படத்திற்கு மட்டும் லைக் போட்டுவிட்டு வந்த தனுஷ் தற்போது ஐஸ்வர்யா சிங்கிளாக இருக்கும் புகைப்படத்திற்கும் லைக்குகளை போடுகிறாராம். இதை பார்த்த நெட்டிசன்கள் பிரிந்ததை ஒட்ட வைக்க தனுஷ் முயற்சிக்கிறாரா இதனால் ஒரு மாற்றம் ஏற்பட்டு தனுஷும் ஐஸ்வர்யாவும் மீண்டும் இணையலாம் என்று இணையவாசிகள் பேசி வருகின்றனர்.