ராஜகுமாரன் தமிழ் சினிமாவில் பணியாற்றிய இயக்குனர் ஆவார். ஆரம்பத்தில் இயக்குனர் விக்ரமன் அவர்களின் உதவியாளராக பணிபுரிந்த ராஜகுமாரன், ஆர் பி சவுத்ரி தயாரித்த காதல் கதையான நீ வருவாய் என திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
முதல் படத்தின் மூலமாகவே பெயரையும் புகழையும் பெற்றார் ராஜகுமாரன். நீ வருவாய் என திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது. எல்லோரும் விரும்பும் வகையில் கதைக்களம் அமைந்திருந்தது. இது மட்டுமில்லாமல் ராஜகுமாரன் அவர்களுக்கு இந்த நீ வருவாய் என திரைப்படத்தின் மூலமாக சிறந்த கதை ஆசிரியருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதும் கிடைத்தது.
முதல் படத்தின் வெற்றிக்கு பிறகு ராஜகுமாரன் ஆர்பி சவுத்ரியுடன் மீண்டும் இணைந்து விக்ரம், தேவயானி, சரத்குமார் மற்றும் குஷ்பூ ஆகியோரை வைத்து விண்ணுக்கும் மண்ணுக்கும் என்ற திரைப்படத்தை இயக்கினார்.
2001 ஆம் ஆண்டு விண்ணுக்கும் மண்ணுக்கும் என்ற திரைப்படம் வெளியான அதே ஆண்டு தேவயானியும் ராஜகுமாரனும் காதலித்து வந்த நிலையில் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். அதற்கு பிறகு 2003 ஆம் ஆண்டு முரளியை வைத்து காதலுடன் என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் சிறந்த குடும்ப படத்திற்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதினை வென்றது. இயக்குனராக மட்டுமில்லாமல் சில படங்களில் நடித்தும் இருக்கிறார் ராஜகுமாரன். பூவே உனக்காக, சூரிய வம்சம், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், கடுகு ஆகிய படங்களில் தோன்றியிருக்கிறார் ராஜகுமாரன்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட ராஜகுமாரன் தனது வீட்டில் நடக்கும் சண்டைகளை பற்றி கலகலப்பாக பேசியிருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால் எங்க வீட்டில் தேவயானி, என் மகள்கள் இனியா பிரியங்கா, சமையல் செய்ய வரும் அம்மா, வீடு கிளீன் பண்ணும் ஒரு அம்மா, கோலம் போட வர அம்மா இவங்க எல்லாருமே மொத்தமா லேடிஸ் தான். அதனால எங்க வீட்ல ஒரு மணிக்கு ஒரு தடவை சண்டை வரும். நான் ஒரே ஒரு ஆம்பள என்ன பண்ணுவேன் சொல்லுங்க. அவங்க கதைக்குள்ள எல்லாம் நான் போகவே மாட்டேன். நீங்களே சண்டை போட்டு நீங்களே பஞ்சாயத்து தீத்துக்கோங்கனு நான் விட்டுவிடுவேன் என்று ஜாலியாக பேசி இருக்கிறார் ராஜகுமாரன்.