தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். சமீபத்தில்தான் விஜய் நடிப்பில் உருவான கோட் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி பிரம்மாண்டமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்ததாக ஹெச்.வினோத் இயக்கும் படத்தில் விஜய் நடிக்க உள்ளார். இது விஜயின் 69-ஆவது படம். இந்த படத்துடன் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் ஈடுபட போவதாக விஜய் அறிவித்தார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியையும் விஜய் தொடங்கிவிட்டார்.
சமீபத்தில் தான் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியும், கொடிபாடலும் அறிமுகப்படுத்தப்பட்டது. வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் போட்டியிட உள்ளது. இப்போது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் மாநாடு நடத்துவதற்கு அனைத்து பணிகளும் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி நடிப்பில் கடைசியாக மழை பிடிக்காத மனிதன் திரைப்படம் ரிலீஸ் ஆனது.
இந்த படம் கலையான விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில் விஜய் ஆண்டனி தனா இயக்கத்தில் உருவான ஹிட்லர் திரைப்படத்தில் நடித்துள்ளார். ஏற்கனவே தனா படைவீரன், வானம் கொட்டட்டும் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். ஹிட்லர் திரைப்படத்தில் ரியா சுமன் கதாநாயகியாக நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் சரண்ராஜ் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஹிட்லர் திரைப்படத்திற்கு விவேக் மெர்வின் இசை அமைத்துள்ளனர்.
இந்த படத்தை செந்தில் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த மாதம் 27-ஆம் தேதி ஹிட்லர் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வடபழனியில் நடைபெற்றது. அப்போது பேசிய விஜய் ஆண்டனி படம் பற்றி நிறைய விஷயங்கள் பேசினார். மேலும் விஜய் எனது நண்பர். அவர் அழைத்தால் கண்டிப்பாக மாநாட்டுக்கு செல்வேன் என விஜய் ஆண்டனி கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.