லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் கடந்த 2020-ஆம் ஆண்டு இதுவரை பார்க்காத அம்மன் படங்களிலிருந்து வித்தியாசமான கதைக்களத்துடன் மூக்குத்தி அம்மன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை ஆர்.ஜே பாலாஜி இயக்கி நடித்திருந்தார். இந்த படத்தில் அம்மனாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்தார்.
வழக்கமான அம்மன் படங்களை போல் இல்லாமல் டான்ஸ், பாட்டு, காதல் ஆகியவற்றை கலந்து வித்தியாசமான கதைக்களத்துடன் ஆர்.ஜே பாலாஜி களமிறங்கினார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாவது பாகம் எப்போது உருவாகும் என ரசிகர்கள் கேட்டுக் கொண்டே இருந்தனர்.
தற்போது அதற்கான வேலைகள் தொடங்கியுள்ளதாக தெரிகிறது. மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தை வேல் ஃபிலிம் சார்பாக ஐசரி கே கணேஷ் தயாரிக்க உள்ளார். மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளார். இந்த படத்தை சுந்தர் சி இயக்குவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.
கடைசியாக சுந்தர் சி இயக்கத்தில் ரிலீசான அரண்மனை 4 திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகி பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது. சுந்தர் சி இயக்கும் பேய் படங்கள் காமெடி ஹாரர் கலந்து ரசிகர்களை கவரும். இப்போது மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை சுந்தர் சி இயக்குவதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொங்க உள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.