சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். முன்னதாக ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. வேட்டையன் படத்தில் அமிதாபச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், பகத் பாசில் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
வேட்டையன் படத்திலிருந்து மனசிலாயோ பாடல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. வேட்டையன் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக மிரட்டுகிறார். இந்த படம் தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் ரிலீஸ் ஆகிறது.
இன்று படத்தின் டிரைலர் வெளியாகும் எனப்பட குழுவினர் ஏற்கனவே அறிவித்தனர். அந்த வகையில் வேட்டையன் படத்தில் ட்ரெய்லர் ரிலீஸ் ஆகி மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. ட்ரைலரில் இடம் பெற்ற சூப்பர் ஸ்டார் காட்சிகளும், வசனங்களும் திரையரங்குகளில் பட்டையை கிளப்ப போகிறது என்பதில் சந்தேகமே இல்லை.