ஆயுர்வேத முறையில் அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு… 30 வருட பழமையான Lotus Herbals இன் வரலாறு தெரியுமா…?

By Meena on அக்டோபர் 2, 2024

Spread the love

பெண்களுக்கு அத்தியாவசிய பொருட்களில் ஒன்றானது அழகு சாதனப் பொருட்கள். தற்போதைய காலகட்டத்தில் விதவிதமாக பல பிராண்டுகளில் அழகு சாதன பொருட்கள் இருக்கிறது. பல கெமிக்கல் முறையில் சென்றாலும் சித்த ஆயுர்வேத முறைப்படி இயற்கை முறையில் தயாரிக்கும் சில அழகு சாதன பொருட்கள் இருக்கின்றது. இதை பல மக்கள் விரும்புவர். அப்படி ஆயுர்வேத முறையில் அழகு சாதன பொருட்களை தயாரிக்கும் பிராண்டு தான் Lotus Herbals. அதன் வரலாறு என்ன என்று இனி பார்ப்போம்.

   

கமல் பஸ்சி என்பவரால் 1993 ஆம் ஆண்டு Lotus Herbals உருவாக்கப்பட்டது. 5000 வருட பழமையான ஆயுர்வேத மூலிகைகளை ஆராய்ச்சி செய்து சருமத்திற்கு எது நல்லது தரும் அனைத்து வயதினருக்கும் ஆண்கள் பெண்கள் என அனைவருக்கும் பொருந்தக்கூடிய ஆயுர்வேத மூலிகைகளை தேர்ந்தெடுத்து ஆராய்ச்சி செய்து உருவாக்கப்பட்டது தான் Lotus Herbals.

   

இந்த Lotus Herbals ஒவ்வொரு தயாரிப்பும் கைகளால் தயாரிக்கப்படுகின்றது. வாடிக்கையாளர்களுக்கு தரமான இயற்கையான சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தயாரிக்கப்பட்ட அழகு சாதன பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என்பதில் Lotus Herbals நோக்கமாகக் கொண்டிருக்கிறது. இந்த Lotus Herbals பிராண்டில் ஸ்கின், தலைமுடி, மேக்கப் என அனைத்து விதமான பொருட்களும் விற்பனையாகிறது.

 

ஆயுர்வேத முறையில் வேதங்களை ஆராய்ச்சி செய்து சித்தர்கள் கூறிய ரகசியங்களை இன்றைய தொழில்நுட்பத்துடன் இணைத்து Lotus Herbals உருவாக்கி இருக்கிறார்கள். இந்த Lotus Herbals பிராண்ட் 16 நாடுகளுக்கு மேல் விற்பனையாகி வருகிறது. இந்தியாவில் 700 நகரங்களில் 1200க்கு மேல் டிஸ்ட்ரிபியூட்டர்களுடன் விற்பனைக்கு சென்று கொண்டிருக்கிறது. ஒன்றரை லட்சம் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் Lotus Herbals விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. ஹிமாலயா, பயோட்டிக், காம ஆயுர்வேதா போன்ற பிராண்டுகளுக்கு இணையாக 30 வருடங்களாக போட்டி போட்டு முன்னணியில் இருக்கும் ஒரு பிராண்டு தான் Lotus Herbals என்பது குறிப்பிடத்தக்கது.