Intermittent Fasting உடலுக்கு நல்லதா…? அதன் நன்மைகள் மற்றும் விளைவுகள் என்ன…?

By Meena on அக்டோபர் 2, 2024

Spread the love

தற்போது பெரும்பாலான மக்கள் டயட்டை கடைபிடித்து வருகின்றனர். அப்படி டயட்டில் பலவிதங்கள் இருக்கிறது. அதில் ஒன்றுதான் Intermittent Fasting டயட் என்பதாகும். Intermittent Fasting டயட் என்பது உணவு எடுக்கும் இடைவேளைகளை கணக்கிட்டு சாப்பிடுவது ஆகும்.

   

Intermittent Fasting டயட்டின் நேரம் ஆனது 16:8 என்பதாகும். அதாவது 16 மணிநேர விரதம் முறையும் 8 மணி நேரம் உணவு சாப்பிடும் நேரமாக பிரிக்கப்பட்டுள்ளது. அந்த 8 மணி நேரத்தில் உடலுக்கு தேவையான சமச்சீராக அழைத்து ஊட்டச்சத்துகளும் கிடைக்கும் படியான உணவுகளை உண்ண வேண்டும். மீதி 16 மணி நேரத்தில் எதையும் சாப்பிடாமல் விரதம் இருப்பது மூலம் உடலுக்கு ஊட்டச்சத்து தேவைப்பட்டால் அது நம் உடலில் இருக்கும் கொழுப்புகளை கரைத்து அதைர்ஜியாக்க உதவும் என்று கூறப்படுகிறது.

   

அந்த பதினாறு மணி நேர இடைவெளி என்பது உணவின் மூலம் கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள் நம் உடலுக்கு முழுமையாக கிடைக்க செய்யும் மெட்டபாலிசத்தை தூண்டுதற்கும் ஜீரண மண்டலத்தை சரியாக வைத்திருப்பதற்கும் உதவி செய்வதே தவிர ஆரோக்கியமற்ற ஊட்டச்சத்துக்கள் குறைவான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்பது கிடையாது.

 

பலருக்கு இந்த Intermittent Fasting ஆல் உடல் எடை குறைதல் போன்றவை நடந்தாலும் எல்லோரும் இந்த டயட்டை பின்பற்ற கூடாது. கர்ப்பிணி பெண்கள், தாய்ப்பால் கொடுப்பவர்கள், சிறுநீரக கற்கள் பிரச்சனை உள்ளவர்கள், இரைப்பை உணவு குழாய் ஆசிட் ரெஃப்ளக்ஸ்பவர்கள் நீரழிவு நோய் கோளாறுகள் குறைவான எடை உள்ளவர்கள், உடல் பலவீனமாக இருப்பவர்கள் ஆகியோர் இந்த Intermittent Fasting டயட்டை எடுத்துக் கொள்ளக் கூடாது.

Intermittent Fasting டயட்டின் முக்கிய நோக்கமாக சொல்லப்படுவது காலை உணர்வை தவிர்ப்பது தான் என்றால் இது முழுவதுமாக உண்மை கிடையாது. காலை உணவை தவிர்ப்பதன் மூலமே உடல் எடை அதிகமாக குறையும் என்பது தவறு. எடையை குறைக்க Intermittent Fasting பின்பற்றும்போது அதற்கு ஏற்றபடி காலை உணவையும் எடுக்கும்படி உங்களுடைய உணவு இடைகளை அமைத்துக் கொள்ளலாம். அப்படி பார்க்கும்போது மாலை 6 மணிக்கு முன்பாக உங்களது உணவுகளை நீங்கள் எடுத்து முடித்து கொள்ள வேண்டும். Intermittent Fasting செய்வதால் அதிகமாக எடை குறையும் என்று கூறுவது தவறு. ஆனால் இது தேவையற்ற உடம்பில் தேங்கியிருக்கும் கொழுப்பை கரைக்கச் செய்கிறது என்பது உண்மை.

எந்த ஒரு டயட்டை நீங்கள் பின்பற்ற நினைத்தாலும் அதற்கு பின்னால் இருக்கும் நன்மை தீமைகளை ஆராய்ந்து மருத்துவரிடம் ஆலோசனை செய்து விட்டு தொடங்குங்கள் என்று அறிவுறுத்தப்படுகிறது. அப்போதுதான் உங்களால் அந்த முயற்சிக்கு ஏற்ற பலனை அடைய முடியும்.