தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித். தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி உள்ளிட்ட திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகின்றார். அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் அஜித் குறித்த ஒரு சுவாரசியமான தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. அதாவது அஜித் தன்னுடைய வாழ்க்கையில் வளர்ந்து வந்த சமயத்தில், நடிகராக வேண்டும், உச்ச நட்சத்திரமாக வேண்டும் என்று முயற்சித்துக் கொண்டிருந்த அந்த சமயத்தில் அஜித் ஒரு பெரிய அவமானத்தை சந்தித்துள்ளார்.
அதாவது ஒரு பிரபலமான பெரிய இயக்குனர் ஒருவரின் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என அஜித் மிகவும் ஆசைப்பட்டு உள்ளார். அப்படித்தான் அந்த இயக்குனரின் பிறந்தநாள் வந்துள்ளது. அவரின் பிறந்தநாள் கொண்டாட்டம் பெரிய ஹோட்டலில் நடைபெற்ற நிலையில் நட்சத்திர பிரபலங்கள் பலரும் கொண்டாடினர். அந்த சமயத்தில் அவருடைய பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்க நினைத்து அஜித் அந்த ஹோட்டலுக்கு சென்று வெளியே நீண்ட நேரம் காத்திருந்தார். இது அந்த இயக்குனருக்கு தெரிந்தும் தன்னுடைய உதவி இயக்குனரை அனுப்பி வைத்து டைரக்டர் சார் இப்போ பிஸியா இருக்காங்க பிறகு பார்த்துக் கொள்ளலாம் போங்க என்று சொல்லி அனுப்பி விட்டார்.
இதனால் கடுப்பின் உச்சத்திற்கு ஆளான அஜித் காலம் ஒருநாள் பதில் சொல்லும், எனக்கும் காலம் வரும் என காத்திருந்து காலப்போக்கில் மிகப்பெரிய ஸ்டார் நட்சத்திரமாக உயர்ந்தார். பின்னர் இயக்குனர் அஜித்தை வைத்து எப்படியாவது ஒரு படம் பண்ண வேண்டும் என எவ்வளவோ முயற்சி செய்தும் அது நடக்காமல் போனது. கடைசி வரை அஜித் அந்த இயக்குனரோடு சேர்ந்து பணியாற்றவே இல்லை. இந்த தகவலை பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.