தமிழ் திரையுலகில் 1965 இல் டைரக்டர் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான வெண்ணிற ஆடை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நகைச்சுவை நடிகர் வெண்ணிற தாய் மூர்த்தி. அத்திரைப்படத்தில் அவர் நடித்ததன் மூலம் அவருக்கு வெண்ணிற ஆடை மூர்த்தி என்ற பெயரும் வழங்கப் பட்டது.
நகைச்சுவை நடிகர் மூர்த்தி உலக மக்கள் அனைவரையும் தனது சிரிப்பால் கட்டிப்போட்டவர். நகைச்சுவை நடிகர் வெண்ணிற மூர்த்தி பல்வேறு தமிழ் திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரையில் வெளிவரும் சீரியல்களிலும் நடித்துள்ளார்.நகைச்சுவை நடிகர் மூர்த்தி இந்திய சினிமா திரை உலகில் 500 – க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இன்றுவரை நடித்துள்ளர்.
வெண்ணிற ஆடை மூர்த்தியின் தனிச்சிறப்பு என்னவென்றால் எப்படியாவது தன்னுடைய காமெடிக் காட்சிகளில் எதாவது இரட்டை அர்த்தம் வருவது போல வசனங்களோ அல்லது உடல் மொழியையோ வெளிப்படுத்தி விடுவார். ஆனாலும் அவற்றில் பல பெரியவர்கள் ரசித்து பார்க்கும்படி இருக்கும். ஈகோ பார்க்காமல் எல்லா நகைச்சுவை நடிகர்களோடும் இணைந்து நடித்துள்ள வெண்ணிற ஆடை மூர்த்தி சமீபத்தில் முழு மகிழ்ச்சியோடு சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன் பின்னர் அவர் எந்த சினிமா சம்மந்தப்பட்ட நிகழ்ச்சியிலும் கலந்துகொள்வதில்லை.
இந்நிலையில் சமீபத்தில் இயக்குனர் மோகன் ராஜா அளித்த நேர்காணல் ஒன்றில் வெண்ணிற ஆடை மூர்த்தி பற்றி ஒரு சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துள்ளார். அதில் “நாங்கள் எம் குமரன் படத்தின் சென்சாருக்காக சென்ற போது மூர்த்தி சாரின் சிலக் காட்சிகளை சென்சார் அதிகாரிகள் ஆட்சேபித்தனர். அவரின் பாடி லாங்குவேஜ், வசனம் எல்லாம் டபுள் மீனிங்காக உள்ளது என்றார்கள். அப்படி என்றால் நீங்கள் அவரை ஏன் தடை பண்ணவில்லை. அவரை சினிமாவில் நடிக்கக் கூடாது என சொல்லிவிடுங்கள்.
அதை விட்டு ஏன் நாங்கள் சொல்லாத அர்த்தத்தை எல்லாம் நீங்களே யோசிக்கிறீர்கள் என்று சண்டை போட்டேன்.” எனத் தெரிவித்துள்ளார். ஆனால் எம் குமரன் படத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தியின் காட்சிகள் எல்லாம் 18+ ஆக இருக்கும் என்பது யாருக்கும் சொல்லித் தெரியவேண்டியதில்லை.