தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகைகளுக்கு எப்போதுமே தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கும். அந்த வரிசையில் இடம் பிடித்தவர் தான் நடிகை சோனா. இவர் 2001 ஆம் ஆண்டு வெளியான அஜித்தின் பூவெல்லாம் உன்வாசம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த அவர் திடீரென கவர்ச்சிப் பாதைக்குத் தாவினார்.
இவர் பெயருக்கு பின்னால் பல ஹீரோக்களின் பெயர்களும் சேர்ந்து அடிக்கடி செய்திகள் வெளியாகும். காமெடி நடிகர்களில் இருந்து முன்னணி நடிகர்களின் பெயர்களும் அடிப்படும். இடையில் பாடகர் எஸ் பி பி சரண், தன்னிடம் அத்துமீறி நடந்துகொண்டதாக இவர் புகார் அளிக்க தமிழ் சினிமா உலகில் பரபரப்பான விஷயமாகப் பேசப்பட்டது. அதன் பின்னர் அந்த பிரச்சனை அடங்க, சோனாவும் ஒரு கட்டத்தில் காணாமல் போனார்.
இந்நிலையில் இப்போது மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்து ‘ஸ்மோக்’ என்ற வெப் சீரிஸை இயக்கியுள்ளார். அது சம்மந்தமாக சில நேர்காணல்களைக் கொடுத்து வருகிறார். அதில் தான் நடித்த ’10.10’ என்ற படத்தில் ஏன் அவ்வளவு கிளாமரான ஒரு வேடத்தில் நடித்தேன் என்பது குறித்து பேசியுள்ளார்.

அதில் “முதலில் எனக்கு அப்போது சினிமா பற்றிய புரிதல் இல்லை. நாங்கள் கீழ் மத்திய தர குடும்பம்தான். அப்போது எனது அம்மாவுக்கு சர்க்கரை நோய் காரணமாக அறுவை சிகிச்சை செய்து விரலை எடுத்தார்கள். அந்த ஆப்பரேஷனுக்குக் காசு வேணும் என்பதால் அந்த படத்தில் நடித்தேன்.
ஆனாலும் அந்த காட்சியில் நடிக்கும் போது தயங்கினேன். ஆனால் இயக்குனர் ஒரு ஆங்கிளில் எடுத்துக் காட்டினார். அந்த ஆங்கிளில் பெரிசாக என் மார்புப் பகுதி தெரியவில்லை. அதனால் நான் நடித்தேன். ஆனால் அப்போது வேறு வேறு ஆங்கிளிலும் படமாக்கினார்கள். அதையெல்லாம் நான் பார்க்கவில்லை. அதில் டாப் ஆங்கிள் எல்லாம் வைத்து எடுத்துள்ளார்கள். டாப் ஆங்கிள் என்றால் எப்படி இருக்கும் என்று அப்போது தெரியவில்லை. தியேட்டரில் படம் பார்க்கும் போதுதான் அதை உணர்ந்தேன். அதைப் பார்த்து என் அம்மா திட்டினார்” எனப் பேசியுள்ளார்.
