உங்க வீட்டு குழந்தைகளின் எதிர்காலத்தை எண்ணி கவலையா?.. வெறும் ரூ.1000 முதலீட்டில் லட்சங்களை வாரி வழங்கும் சூப்பரான சேமிப்பு திட்டம்..!

By Nanthini on பங்குனி 15, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் தங்களுடைய எதிர்காலத்திற்கு இப்போதையிலிருந்து ஒரு குறிப்பிட்ட பணத்தை சேமித்து வைக்க வேண்டும் என்று எண்ணுகின்றனர். மக்களுக்காக மத்திய அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதற்காக வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்களில் ஏராளமான சேமிப்பு திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது. பிறந்த குழந்தை முதல் முதியோர்கள் வரை அனைவருக்கும் பிரத்தியேகமாக சேமிப்பு திட்டங்கள் உள்ளன. அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் என்பிஎஸ் வாத்சல்யா திட்டம். இந்த புதுமையான ஓய்வூதிய திட்டம் சிறார்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் இளம் சந்தாதாரர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பதை மட்டுமே நோக்கமாக கொண்டுள்ளது.

ஆண்டுக்கு ரூ.50,000 செலுத்தினால் 18 வயதில் ரூ.25 லட்சம், 60 வயதில் ரூ.12.5  கோடி! - 'என்பிஎஸ் வத்சல்யா' திட்டம் | NPS Vatsalya Pension Scheme for  Minors explained in tamil ...

   

அதே சமயம் சிறுவயதிலிருந்து சேமிப்பு கலாச்சாரத்தை வளர்ப்பதன் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுகிறது. இந்த திட்டத்தின் படி ஒரு குழந்தை பிறக்கும் போது அந்த குழந்தையின் பெயரில் ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாய் செலுத்தினால் அந்த குழந்தைக்கு 18 வயது ஆகும்போது 25 லட்சம் ரூபாய் உங்களுக்கு கிடைக்கும். அந்தக் குழந்தை தனது பருவ வயதை எட்டி தாமாக வருவாய் ஈட்ட தொடங்கும் போது தாமே இந்த தொகையை தொடர்ந்து செலுத்தினால் அவருடைய ஓய்வு வயதின் போது 12.5 கோடி ரூபாய் வரை கிடைக்கும். 12 வயதிற்கு உட்பட்டவர்களும் ஓய்வூதிய பலன்கள் அளிக்கும் இந்த திட்டம் அவர்களுடைய பொருளாதார சுதந்திரத்திற்கும் வழி வகுக்கும்.

   

NPS வாத்சல்யா: ரூ.1000 முதலீட்டுக்கு எவ்வளவு லாபம்? அதிக ரிட்டன்ஸ் தரும்  அசத்தல் திட்டம்! | NPS Vatsalya: Invest Rs 1,000 Yearly and Secure Your  Child's Future - Tamil Goodreturns

 

குறைந்தது ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் செலுத்தி இந்த திட்டத்தில் இணையலாம். இந்தத் திட்டத்தின் படி சேமிப்பு தொகைக்கு உச்சவரம்பு என எதுவும் கிடையாது. பிறந்த குழந்தை முதல் 18 வயது வரையிலான அனைவருக்கும் இந்த திட்டம் பொருந்தக் கூடியது. இந்த திட்ட கணக்குகளை வங்கிகள், அலுவலகங்கள் மற்றும் ஓய்வூதிய நிதிகள் உள்ளிட்ட அமைப்புகள் மூலமாகவும் e-NPS என்ற இணையதளம் மூலமாகவும் தொடங்கலாம். கணக்குதாரரின் ஆதார், ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் தேவைப்படும்.

Nanayam Vikatan - 11 August 2024 - செல்வமகள் திட்டத்தைவிட சிறப்பானதா  'என்.பி.எஸ் வாத்சல்யா' திட்டம்..? | guidance for nps vatsalya scheme -  Vikatan

குழந்தைகளுக்கு கணக்கு தொடங்கப்படும் போது அவர்களின் பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து பெற்றோர்களின் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்தத் திட்டத்தில் அவசர தேவைகளுக்காக முதலீடு தொடங்கியதில் இருந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மொத்த பங்களிப்பில் 25 சதவீதத்தை திரும்ப பெற்றுக் கொள்ளும் வசதியும் உள்ளது. இது போன்று மூன்று முறை பணத்தை திரும்ப பெற இந்த திட்டத்தில் அனுமதிக்கப்படும். மேலும் குழந்தைகள் 18 வயது நிரம்பும் போது இந்த திட்டத்திலிருந்து வெளியேறி கொள்ளவோ அல்லது தொடர்ந்து தேசிய ஓய்வூதிய திட்டத்தில் இணைவதற்கோ அனுமதி வழங்கப்படும்.