என் முதல் படம் ‘பூஞ்சோலை’ வராதது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நல்லதுதான்.. ஓப்பனாக பேசிய வெங்கட்பிரபு..

By vinoth on மார்ச் 22, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் இன்றிருக்கும் வெற்றிகரமான கமர்ஷியல் இயக்குனர்களில் வெங்கட்பிரபுவும் ஒருவர். அவர் இயக்கிய சென்னை 28, சரோஜா, மங்காத்தா மற்றும் மாநாடு ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. இப்போது விஜய்யை வைத்து கோட் படத்தை இயக்கி வருகிறார்.

வெங்கட் பிரபு இயக்குனர் ஆவதற்கு முன்னர் அவர் ஏப்ரல் மாதத்தில் மற்றும் சிவகாசி ஆகிய படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்துள்ளார். பின்னர் உன்னை சரணடைந்தேன் படத்தில் கதாநாயகனாக நடித்தார். அதன் பிறகுதான் அவர் சென்னை 28 படத்தை இயக்கினார்.

   

ஆனால் பலரும் அறியாத தகவல் ஒன்று உள்ளது. அது என்னவென்றால் 1996 ஆம் ஆண்டே வெங்கட் பிரபு தன்னுடைய தந்தை கங்கை அமரன் இயக்கத்தில் பூஞ்சோலை என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். இந்த படத்தில் சங்கீதா கதாநாயகியாக நடித்தார். படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். படத்தின் மொத்த ஷூட்டிங்கும் நிறைவடைந்தது.

   

ஆனால் ஏதோ சில காரணங்களால் இந்த படம் ரிலீஸாகவில்லை. பொருளாதார பிரச்சனைகளில் சிக்கியதாக சொல்லப்படுகிறது. ஒருவேளை அந்த படம் ரிலீஸாகி வெற்றி பெற்றிருந்தால் வெங்கட்பிரபு ஒரு முன்னணி நடிகராகக் கூட வந்திருக்கலாம்.  ஆனால் பூஞ்சோலை படம் காரணமாக அந்த படத்தின் தயாரிப்பாளரான கங்கை அமரன் கடுமையான பொருளாதாரப் பின்னடைவை சந்தித்துள்ளார்.

 

அதன் பின்னர் நடிப்பு வேண்டாம் என்றிருந்த வெங்கட்பிரபு கார்த்திக் ராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோரின் இசையில் சில பாடல்களை பாடியுள்ளார். பூஞ்சோலை படத்தைப் பற்றி ஒரு நேர்காணலில் பேசும்போது “அந்த படம் ரிலீஸ் ஆகாதது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நல்லதுதான்” என ஜாலியாகக் கடந்து சென்றுள்ளார்.