திருமணமான ஒரு வருடத்திற்குள் கணவரை பிரிந்த ரோஜா சீரியல் நடிகை.. திடீரென்று எடுத்த அதிரடி முடிவு..

By Priya Ram

Published on:

சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியல் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தவர் பிரியங்கா நல்காரி. இந்த சீரியல் மாபெரும் அளவில் ஹிட்டானது. அதேபோல பிரியங்காவின் ரோஜா கதாபாத்திரமும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தது. தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் நள தமயந்தி சீரியலில் பிரியங்கா நடித்து வருகிறார். கடந்த வருடம் தனது காதலரான ராகுல் என்பவரை பிரியங்கா மலேசியாவில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.

   

அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். பின்னர் மீண்டும் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தனர். அவர்களது திருமணம் எளிமையாக நடந்த போது குடும்பத்தில் இருப்பவர்களுக்கு சம்மதம் இல்லையா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த பிரியங்கா எங்களது திருமணம் மலேசியாவில் நடந்ததால் குடும்பத்தினரால் கலந்து கொள்ள முடியவில்லை என விளக்கம் அளித்தார்.

திருமணம் ஆன சில நாட்களிலேயே சீதாராமன் சீரியலில் இருந்து பிரியங்கா விலகிவிட்டார். இந்த நிலையில் யாரும் எதிர்ப்பாராதவிதமாக பிரியங்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த தனது கணவர் புகைப்படங்களையும் அவருடைய அடுத்த ரிலீஸ் வீடியோக்களையும் டெலிட் செய்து விட்டார். இதனால் இருவரும் பிரிந்து விட்டார்களா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர்.

மேலும் ரசிகர் ஒருவர் நீங்கள் இப்போது சிங்கிளா என கேள்வி எழுப்பியதற்கு பிரியங்கா ஆமாம் என்று பதில் கொடுத்துள்ளார். இதன் மூலமாக அவர் கணவரை பிரிந்தது உறுதியானது. மேலும் ஏற்கனவே பிரியங்கா தனது இன்ஸ்டாகிராம் கணக்கை டெலிட் செய்ய உள்ளதாக பிரியங்கா அறிவித்தார். அதன்படி இன்று தனது இன்ஸ்டாகிராம் கணக்கை டெலிட் செய்து விட்டார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

author avatar
Priya Ram