மகளின் பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடிய ஆல்யா மானசா-சஞ்சீவ் தம்பதி.. வைரலாகும் Celebration வீடியோ..!!

By Priya Ram

Published on:

சின்னத்திரை நடிகர்கள் காதலித்து நிஜ வாழ்க்கையிலும் திருமணம் செய்து கொள்வார்கள். அந்த வகையில் சீரியலில் நடித்ததன் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்டு பிரபலமானவர்கள் தான் ஆல்யா மானசா சஞ்சீவ் தம்பதியினர்.

   

இவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் நடித்த போது காதல் மலர்ந்தது. இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் இனியா சீரியலில் ஆல்யா தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

இதேபோல சஞ்சீவ் கயல் சீரியலில் சைத்ரா ரெட்டிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். ஆலியா மானசா சஞ்சீவ் தம்பதியினர் எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார்கள். அவர்கள் தற்போது தங்கள் மகள் ஐலாவின் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடி உள்ளனர்.

அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் ஐலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அழகான குடும்பம் எப்போதும் இப்படி இருங்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by alya_manasa (@alya_manasa)

author avatar
Priya Ram