தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு என தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. இந்நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் கேட்கும் எண்ணிக்கையைவிட குறைவான எண்ணிக்கையில் தொகுதிகளை ஒதுக்கினால் திமுக கூட்டணியிலிருந்து வெளியேறுவேன் என தவாக தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.
திமுக கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சிகளுமே கூடுதல் தொகுதிகள் கேட்போம் என கூறி வருவது திமுகவுக்கு பெரும் தலைவலியாக எழுந்துள்ளது. கடந்த தேர்தலில் தவாக திமுக கூட்டணியில் 1 தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.
