திடீர் ட்விஸ்ட்…. அரசியலை விட்டு விலகும் விஜய்?… பாஜக வைத்த செக்… யாரும் எதிர்பார்க்காத திருப்பம்…!

By Nanthini on ஐப்பசி 24, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றன. தற்போது விஜய்யும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. அவரை தங்கள் கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் மாற்றுக் கட்சியினர் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக கரூர் விவகாரத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் விஜயுடன் கூட்டணி அமைக்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. ஆனால் விஜய் இதுவரை கூட்டணி குறித்து அறிவிப்பை வெளியிடாமல் உள்ளதால் யாருடன் கூட்டணி அமைப்பார் என்ற எதிர்பார்ப்பு தொடர்ந்து நிலவி வருகிறது.

இப்படியான நிலையில் கரூர் விவகாரத்தைத் தொடர்ந்து தமிழக வெற்றி கழகம் விஜயை கூட்டணிக்கு இழுக்க பாஜக முயற்சித்து வரும் நிலையில் NDA கூட்டணியில் இணையுங்கள் அல்லது அரசியலை விட்டு விலகுங்கள் என பாஜக விஜய்க்கு அழுத்தம் கொடுப்பதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லியில் உள்ள பாஜக மூத்த தலைவர்கள், பாஜக மற்றும் அதிமுகவுடன் இணைந்து செயல்பட விஜய்க்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதாகவும் கூறப்படுகிறது