தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பலருடைய விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்ட நிலையில் மீண்டும் தகுதி உள்ளவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாக தற்போது பலரும் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்து வருகிறார்கள். மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு வருகின்ற டிசம்பர் 15ஆம் தேதி முதல் பணம் கிடைக்கும் என அரசு ஏற்கனவே அறிவித்தது. இதனைத் தொடர்ந்து முகாம்களில் விண்ணப்பித்தவர்களின் வீடுகளில் அடுத்த வாரத்தில் இருந்து அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய உள்ளனர்.
இந்நிலையில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் அதிக பயனர்களை சேர்க்கும் வகையில் விதிமுறையில் சில தளர்வுகளை வழங்கியுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். அவற்றை பொதுமக்கள் அறிந்து திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்திய அவர், தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என உறுதி அளித்துள்ளார். உங்களுடன் ஸ்டாலின் முகாமுக்கு சென்று தளர்வுகள் குறித்த விவரங்களை குடும்ப தலைவிகள் அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
