“ஆசிரியை வீட்டில் 36 சவரன் அவுட்”…. ரகசியமாக ரவுண்ட் அடித்த காதல் தம்பதி… இறுதியில் காத்திருந்த பேரதிர்ச்சி…!

Spread the love

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள கிறிஸ்டியான்பேட்டையைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியை மரியா (63). இவர் தனது கணவர் ராஜ்குமாருடன் கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி ஆற்காட்டில் உள்ள பாதிரியார் ஒருவரைப் பார்க்கச் சென்றுள்ளார். இரவு 11 மணியளவில் வீட்டிற்குத் திரும்பியபோது, முன்பக்க இரும்புக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த ஆரம், நெக்லஸ், வளையல் உட்பட மொத்தம் 36 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து மரியா அளித்த புகாரின் பேரில் காட்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். காட்பாடி டிஎஸ்பி விஜிகுமார் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சென்னை, பெங்களூரு, சித்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஒரு வாலிபரும் பெண்ணும் மெயின் ரோட்டிற்குச் சென்று, பேருந்து நிறுத்தியத்தில் இருந்து சித்தூர் செல்லும் பேருந்தில் ஏறியது தெரியவந்தது.

இதையடுத்து, சித்தூர் சென்று அங்குள்ள காவல்துறை உதவியுடன் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, ஒரு வீட்டில் பதுங்கியிருந்த அந்த ஜோடியைப் போலீசார் சுற்றிவளைத்துக் கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் விருதுநகரைச் சேர்ந்த முத்துவேல் கார்த்திக் (32) மற்றும் அவரது மனைவி பிரபாவதி (30) என்பதும், இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் என்பதும் தெரியவந்தது. இவர்கள் வெளியூர்களுக்குச் சென்று வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, அப்பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்ததை ஒப்புக் கொண்டனர்.

திருடிய நகைகளை உடனடியாக விற்று, அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்வதை வழக்கமாகக் கொண்டிருந்த இந்தத் தம்பதியிடம் இருந்து 26 சவரன் தங்க நகைகள் மற்றும் திருட்டுப் பணத்தில் வாங்கப்பட்ட கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட கணவன்-மனைவி இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். CCTV காட்சிகளின் உதவியால் இந்தத் தொடர் திருட்டு தம்பதி உடனடியாகச் சிக்கியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

காய்ச்சலால் துடித்த மகன்… அம்மாவின் அதிரடி முடிவால்… அதிர்ந்த மருத்துவர்… இணையத்தில் வைரல்…!

உங்களுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதும், இந்த நாள் இவ்வளவு சிரமமாக அமைந்ததும் வருத்தமளிக்கிறது. காய்ச்சலோடு அதிகாலையிலேயே விழிப்பதும், உடம்பில் தெம்பே…

3 மணத்தியாலங்கள் ago

அடியே…. லிஃப்ட்டுக்குள்ள வராத… நாயை வைத்து அலப்பறை… ஆசிரியை அறைந்து தலைமுடியைப் பிடித்து இழுத்த பெண்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ராஜ்பாத் நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் அமைந்துள்ள விண்ட்சர் பாரடைஸ் குடியிருப்பு லிஃப்ட்டில், செல்லப்…

3 மணத்தியாலங்கள் ago

என்னை விடுங்கடா சாமி… சுற்றுலாப் பயணியை கெட்டியாக பிடித்துக்கொண்ட வௌவால்… அலறித் துடித்த நபர்… இணையத்தில் வீடியோ வைரல்…!!

தாய்லாந்தின் புகழ்பெற்ற நீர்வீழ்ச்சி பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணி ஒருவரின் தோளில் எதிர்பாராதவிதமாக வௌவால் ஒன்று வந்து அமர்ந்தது. பயத்தில்…

4 மணத்தியாலங்கள் ago

எனக்கு எதுவுமே வேணாம்டா… தந்தையின் இந்த வார்த்தைக்கு… பின்னால் இவ்வளவு பெரிய வலி இருக்கா?… இணையத்தில் வீடியோ வைரல்…!

தந்தையின் அன்பு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத தூய்மையானது. தன் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காகத் தன் சொந்த ஆசைகளைக்கூடப் புன்னகையோடு தியாகம் செய்யும்…

4 மணத்தியாலங்கள் ago

“பிரமிப்பூட்டும் லால்பாக் சா ராஜாவின் 3D அழைப்பிதழ்….” மதுரை மீனாட்சி அம்மன் கோயில் முகப்புத் தோற்றம்…. இணையத்தில் வைரலாகும் பிரத்யேக வீடியோ…!

மும்பையின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் வழிபடப்படும் லால்பாக் சா ராஜா விநாயகர் சதுர்த்தி 2026 விழாவை முன்னிட்டு, முக்கியப் பிரமுகர்கள்…

4 மணத்தியாலங்கள் ago

“லால்பாக் சா ராஜாவை தரிசித்த வித்யுத் ஜாம்வால்…” சங்கு ஊதி, உடுக்கை அடித்து பக்திப்பரவசம்…! இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

மும்பையின் மிகவும் புகழ்பெற்ற லால்பாக் சா ராஜா விநாயகர் பந்தலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாலிவுட் நடிகரும் சண்டைக்கலைஞருமான வித்யுத்…

4 மணத்தியாலங்கள் ago