என்னது…! வேலாயுதம் படம் ரிலீஸாகி 12 வருடமாச்சா?…. அப்பவே இத்தனை கோடி வசூல் பண்ணி இருக்கா…. வெளியான தகவல்…!!!

By Mahalakshmi

Published on:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் பல சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார். இவரின் திரைப்படங்கள் எப்போதும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை கொடுக்கும். இதனாலே பெரும்பாலான இயக்குனர்கள் விஜய் வைத்து படம் எடுப்பதற்கு நீ நான் என்று போட்டி போட்டுக் கொள்வார்கள்.

   

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில் இயக்குனர் மோகன்ராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வேலாயுதம். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா, ஜெனிலியா நடித்திருப்பார்கள். அதைத் தொடர்ந்து சரண்யா மோகன், சூரி, சந்தானம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

வேலாயுதம் திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் 12 வருடத்திற்கு முன்னாள் வேலாயுதம் திரைப்படம் செய்த வசூலை குறித்து தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது இந்த திரைப்படம் அப்போது 60 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகின்றது. 12 வருடத்திற்கு முன்பு 60 கோடி என்பது மிகப்பெரிய விஷயமாகும்.

author avatar
Mahalakshmi