காதல் கணவருடன் சேர்ந்து புது பிஸ்னஸை ஆரம்பித்த ரோஜா சீரியல் நடிகை.. வைரலாகும் புகைப்படங்கள்..

By Mahalakshmi on ஐப்பசி 27, 2023

Spread the love

ரோஜா சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமான பிரியங்கா நல்காரி தற்போது தனது கணவருடன் சேர்ந்து ரெஸ்டாரன்ட் ஒன்றை திறந்து இருக்கிறார். இது தொடர்பான புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு இருக்கின்றார். ரோஜா சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் பிரியங்கா நல்காரி.  இவர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். கடந்த 2010 ஆம் ஆண்டு அந்தேரி பந்துவையா என்ற திரைப்படத்தின் மூலமாக தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆனார்.

   

இந்த திரைப்படம் இவருக்கு அந்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை. தமிழில் இவர் தீயா வேலை செய்யணும் குமாரு , காஞ்சனா உள்ளிட்ட  திரைப்படங்களில் ஒரு சில கதாபாத்திரங்களில் நடித்தார். வெள்ளித்திரையில் சரியான வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சின்னத்திரை பக்கம் வந்து விட்டார். சன் டிவியில் இவர் நடிப்பில் ஒளிபரப்பாகி வந்த ரோஜா சீரியல் மிகவும் பிரபலமானது.

   

 

இந்த சீரியலுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அதுமட்டுமில்லாமல் இவருக்கும் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் அமைந்தது. இதைத் தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பாக்கி வந்த சீதாராமன் என்ற சீரியலில் நடித்து வந்தார். அந்த சீரியலில் இருந்து விலகிய இவர் மீண்டும் நளதமயந்தி என்ற சீரியலில் தற்போது நடித்த வருகிறார்.

இவர் சமீபத்தில் தனது நீண்ட நாள் காதலரான ராகுல் கிட்டு என்பவரை மலேசிய முருகன் கோயிலில் திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர் தனது கணவருடன் சேர்ந்து ஒரு ரெஸ்டாரன்ட் தொடங்கி இருக்கின்றார். இது தொடர்பான பூஜை புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இருக்கின்றார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.