நடிப்புக்கு பாய் சொன்னாலும் மிகப்பெரிய கோடீஸ்வரி தான்.. 38 வது பிறந்தநாளை கொண்டாடும் அசினின் சொத்து மதிப்பு..

By Mahalakshmi

Updated on:

தமிழ் , தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை அசின். தமிழில் அஜித், விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பல ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து இவருக்கு திடீரென பாலிவுட் பக்கம் வாய்ப்பு கிடைத்தது. அங்கு அவருக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் ஷர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

   

திருமணத்திற்கு பிறகு இவர் சினிமாவை விட்டு விலகினார். முழு நேரமும் தனது கணவரும் மற்றும் குழந்தைகளை கவனித்து வந்தார். சினிமாவை விட்டு விலகி இருந்தாலும் இவரைப் பற்றி ஏதாவது ஒரு தகவல் இணையத்தில் அடிக்கடி வெளியாகிக் கொண்டுதான் இருக்கும். சமீபத்தில் கூட தனது கணவரை இவர் விவாகரத்து செய்யப் போகிறார் என்ற செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து அசினின் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி வந்தது.

இதை கேட்டு மிகவும் கடுப்பான அசின் இந்த வதந்தி தொடர்பாக விளக்கம் அளித்தார். இவர் நேற்று தன்னுடைய 38 வது பிறந்த நாளை கொண்டாடியிருக்கிறார். இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் என்னது அசினுக்கு 38 வயது ஆகிவிட்டதா என்று ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள். இவரின் சொத்து மதிப்பு மட்டும் 117 கோடியாகும். இது அனைத்தும் இவர் தனது நடிப்பாலும் உழைப்பாலும் சம்பாதித்த பணமாகும்.

அது மட்டும் இல்லாமல் இவரிடம் பென்ஸ், ஆடி என்று பல வகையான கார்கள் இருக்கின்றது. இவரது சொந்த ஊரான கேரளாவிலும் ஆடம்பர பங்களா, பண்ணை வீடு என்று ஏகப்பட்ட சொத்துக்கள் இருக்கின்றன. இளம் வயதிலேயே கோடீஸ்வரியாக இருக்கும் இவரின் கணவரின் சொத்து மதிப்பு சொல்லவா வேண்டும். அவரிடமும் ஏகப்பட்ட கோடிகளில் சொத்துகள் இருக்கின்றதாம். 38 வயதிலேயே சொந்தமாக 100 கோடிக்கும் மேல் சொத்து வைத்திருக்கும் இவர் தற்போது தனது கணவருடன் சேர்ந்து முழு நேரமும் பிசினஸை கவனித்து வருகிறாராம்.

author avatar
Mahalakshmi