லியோ படத்தில் விஜயின் ஹேர் ஸ்டைல்…. இதுக்கு பின்னாடி இவ்வளவு கதை இருக்கா?…. தளபதியின் ஹேர்ஸ்டைலிஷ் பகிர்ந்த தகவல்…!!!

By Mahalakshmi

Published on:

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திரமாக வலம் வருவல் நடிகர் விஜய். இவர் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமாக இருந்தது லியோ திரைப்படம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து ஏகப்பட்ட நடிகர் பட்டாளம் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தது. இந்த திரைப்படம் வெளியாகி ஒரே வாரத்தில் 450 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

   

அடுத்ததாக விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் விஜய் அவர்களின் தலைமுடி பற்றி இணையதளங்களில் ட்ரோல்கள் எழுந்த வண்ணம் இருக்கும். விஜய் விக்கு வைத்திருக்கின்றார் என்று பலரும் விமர்சனம் செய்து வந்தனர். இந்நிலையில் அவருக்கு ஹேர் ஸ்டைலிசாக இருக்கும் தேவ் சக்திவேல் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருந்தார்.

அதில் ஒவ்வொரு படங்களிலும் விஜய் விதவிதமான ஹேர் ஸ்டைலில் காணப்படுகிறார். ஒருவேளை விக்கு வைத்திருக்கிறாரா என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். விஜய்க்கு தலையில் முடியே கிடையாது எனவும் ட்ரோல் செய்து வந்தனர். அதெல்லாம் பொய் என்று சக்திவேல் கூறியிருக்கிறார். விஜய் தனது ரசிகர்களுக்காக ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான லுக்கில் காட்சி கொடுக்க வேண்டும் என்பதற்காக மெனக்கட்டு நடிப்பார்.

அதுமட்டுமில்லாமல் ஒரு படத்தில் கமிட்டாகி விட்டால் ஆறு மாதம் காலம் ஒரே ஹேர் ஸ்டைலில் தான் இருப்பாராம். எப்படி கட் பண்ண வேண்டும் என்று கேட்டால் எதுவும் கூறவே மாட்டாராம். நீயே பார்த்து ஏதாவது செய் என்று கூறி விடுவாராம். அதுதான் எனக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். ஒருவேளை சக்திவேல் ஹேர் ஸ்டைல் செய்வது மிகவும் பிடித்தது என்றால் சூப்பர் என்று கூறுவாராம்.

லியோ படத்திலும் அப்படித்தான் நடந்தது. நீண்ட தலைமுடியுடனே இருந்தார். அவருக்கு ஏற்றவாறு சக்திவேல் அந்த ஹேர் ஸ்டைலை உருவாக்கினாராம். இதை பார்த்து விஜய் மிகவும் பிடித்துப் போனதாக கூறியிருந்தார். உடனே அந்த சந்தோஷத்தில் விஜய்யிடம் இதே லுக்கில் உங்களுடன் ஒரு போட்டோ எடுக்கிறேன் என்று கூறி ஒரு புகைப்படமும் எடுத்துக் கொண்டாராம். இதனை அவர் ஒரு பேட்டியில் மகிழ்ச்சியாக பகிருந்தார்.

author avatar
Mahalakshmi