பிறந்தநாள் அதுவுமா இப்படியா..? வருத்தத்துடன் நடிகர் வேல ராம மூர்த்தி வெளியிட்ட வீடியோ.. வைரல்..

By Ranjith Kumar

Updated on:

vela rammoorthy

சேதுபதி, கிடாரி, கொம்பன், இது போன்ற மிகப்பெரிய படங்களில் குணச்சித்திரனாகவும், வில்லனாகவும், துணை நடிகராகவும் வளம் வரும் மாபெரும் நடிகர் வேல் ராமமூர்த்தி அவர்கள், அவர் நடித்த அனைத்து திரைப்படங்களிலும் உள்ள கதாபாத்திரம் மிகப் பேசும் பொருளாக அமைந்திருக்கும், அவர் நடித்தார் என்று சொல்வதை விட அவர் அந்த கதாபாத்திரத்தில் வாழ்ந்தார் என்று கூறலாம் ஏனென்றால் அப்படிப்பட்ட நடிப்பின் ஜாம்பவான் அவர்.

   

“ஏய் இந்தாம்மா” என்ற வசனம் மூலம் பிரபலமான மாரிமுத்து அவர்கள் சீரியல் ஒன்றில் நடித்து வந்த நிலையில் அவர் இறந்த பின்னர் அந்த இடத்தை நிரப்பவே முடியாது என்று நினைத்த மக்கள் மனதில் வேல் ராமமூர்த்தி அவர்கள் அந்த கதாபாத்திரத்தை மாரிமுத்து வின் நடிப்பிற்கு ஈடாக தன் நடிப்பின் திறமையை காமித்து அந்த கதாபாத்திரத்தை தாங்கி பிடித்து மாரிமுத்து எப்படி மக்கள் மனதில் நீங்க இடத்தை தக்க வைத்தாரோ அதேபோல் இவரும் மக்கள் மனதில் இடத்தை பிடித்து தக்க வைத்துக் கொண்டிருக்கிறார், அப்படிப்பட்ட நடிகர் தான் இவர்.

பிப்ரவரி 1ஆம் தேதி இவர் பிறந்த நாளன்று இவர் சமூக வலைதளத்தின் பக்கத்தில் மனம் உருகி ஒரு வீடியோ ஒன்று வெளியிட்டு இருந்தார், அந்த வீடியோவில் தனது பிறந்தநாள் க்காக ஆயிரக்கணக்கான வாழ்த்துக்கள் கூறிய உலகம் எங்கும் இருக்கும் தமிழர்கள் அனைவருக்கும் நன்றி கூறி தன் மன நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

WhatsApp Image 2024 02 03 at 112803 AM

அதுமட்டுமின்றி அவர் வேறொன்று மனம் வருத்தப்பட்டு கூறியிருந்தார், இவர் பேரில் வேற யாரோ ஒருவர் பேக் ஐடி ஒன்று உருவாக்கி தன் பேரில் மற்றவர்களிடம், தன் நண்பர்களிடம், தன் குடும்பத்தினரிடம் பணம் கேட்டு மோசடி செய்வதாக கூறியிருந்தார், ஆதலால் அந்த ஃபேக் ஐடி இருந்து யாராவது பணம் கேட்டால் யாரும் தராதீர்கள் என்று தன் இணைய பக்கத்தை ஃபாலோ செய்யும் நண்பர்கள் மற்றும் குடும்பத்திற்கு எச்சரிக்கை விழிப்புணர்வு வீடியோ கொடுத்திருந்தார்.

 

View this post on Instagram

 

A post shared by Kumudam (@kumudamonline)

author avatar
Ranjith Kumar