விஜய்க்கு கண்டிப்பா இந்த பொறுப்பு இருக்கு.. அரசியில் கட்சி தொடங்கிய மகனுக்கு தாய் ஷோபா சொன்ன விஷியங்கள்.. வைரலாகும் ஆடியோ..

By Archana

Published on:

நடிகர் விஜய் நீண்ட வருடமாக அரசியலுக்கு வரப் போகிறார், வரப் போகிறார் என எதிர்பார்த்து வந்த நிலையில், தற்போது உண்மையாகவே வந்து விட்டேன் எனக் கூறியிருக்கிறார். முதல் அடியாக தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சி ஆரம்பித்து அதனை இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து, மக்களிடம் அறிவித்தும் இருக்கிறார் விஜய். சமூக வலைதளங்களில் டி.வி.கே என்ற பெயரில் புதிய அக்கவுண்ட் தொடங்கி தனது முதல் அறிக்கையை பதிவு செய்து இருக்கிறார் விஜய். வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனவும், 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை குறிவைத்து களமிறங்க இருப்பதாகவும் அறிவித்திருக்கிறார். கமிட் ஆகியுள்ள படத்தை முடித்து விட்டு, முழு நேர அரசியலில் ஈடுபட இருப்பதாக அறிக்கை மூலம் அறிவித்திருக்கிறார் விஜய்.

102 784x441

இந்த செய்தியை கேட்டு மகிழ்ச்சியடைந்துள்ள அவரது ரசிகர்கள், பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் என பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். அதேப் போல அவரது தாய் ஷோபாவும் தனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி அளித்த பேட்டியில் உணர்ச்சி பொங்க அவர் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

   
ezgif 3 adf5c6e1ca

தனது மகனின் அரசியல் வருகை குறித்து ஒரு அம்மாவாக மட்டுமின்றி சமூக கடமை உள்ள ஒரு பெண்மணி ஆகவும் பதில் சொல்லப் போகிறேன். எனக்கு அரசியல் தெரியாது என்று சொல்ல மாட்டேன். ஒவ்வொரு குடிமகனும் அரசியல் தெரிந்து வைத்திருக்க வேண்டும். குறிப்பாக விஜய் போன்ற ஆளுமை உள்ளவர்கள் கண்டிப்பாக அரசியலுக்கு வரவேண்டும். புயலுக்குப் பின் தான் அமைதி என்று சொல்வார்கள். ஆனால் விஜயின் அமைதிக்கு பின் தான் ஒரு புரட்சி ஏற்படப் போகிறது. விஜயின் ரசிகர்கள் தற்போது அவரது கட்சியின் தொண்டர்களாக மாற இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

author avatar
Archana