ரஜினியை விட விஜய் எவ்ளோவோ.. இனி விஜய்க்கும் அவருக்கும் தான் போட்டி.. நேரடியாக கருத்தை பதிவிட்ட ப்ளூ சட்டை மாறன்..

By Archana

Published on:

தமிழ் சினிமாவில் உட்சபட்ச நடிகராக 220 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் ஒரு நடிகர், தனது சினிமா வாழ்க்கையை விட்டு விட்டு அரசியலுக்கு வரப் போகிறேன் என அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுப் பொருளாக மாறியுள்ளது. ஒரு புறம் திமுக குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே மாறி மாறி ஆளும் கட்சி. மற்றொரு புறம் யார் கட்சிக்குள்ளேயே சண்டையிட்டுக் கொள்ளும் எதிர்க்கட்சி என அழைக்கப்படும் அதிமுக. தமிழ்நாட்டில் தாமரை மலருவது அரிது என்பது தெரிந்தும் கூட, பிரதான எதிர்க்கட்சியாக செயல்பட்டு வரும் பாஜக என தமிழ அரசியலில் யாரை நம்புவது என மக்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

Vijoy 2401301314

இதிலிருந்து மீண்டு புதிதாக யாராவது நம்மை ஆண்டால் நன்றாக இருக்கும் என மக்கள் எண்ணும் போது, ரஜினி, கமல், சீமான் என பலரும் அரசியலுக்குள் வந்தாலும், யார் மீதும் மக்களின் நம்பிக்கை செல்லவில்லை. இப்படிப்பட்ட சூழலில் தான், நடிகர் விஜய் அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்துள்ளார். நீண்ட வருடங்களாக அரசியலுக்குள் வருவதற்கான பல படிகளை கற்றுக் கொண்டிருந்த விஜய், வருவாரா வரமாட்டாரா என பலரும் பல விமர்சனங்களை வைத்து வந்த நிலையில், இறுதியாக அரசியல் கட்சியை தொடங்கி அதனை அறிவித்தும் இருக்கிறார் விஜய்.

   
IMG 20230617 WA0025

தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் தனது கட்சியின் பெயரை தேர்ந்தல் ஆணையத்தில் பதிவு செய்திருக்கிறார் விஜய். புதிய லெட்டர் பேட்டில் புது அறிக்கையை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறார் விஜய். 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை குறிவைத்து அரசியலுக்குள் காலடி எடுத்து வைக்கும் விஜய் குறித்து பலரும் பலவாறு கருத்து தெரிவித்து வருகின்றனர்.

blue sattai maran vijay

அந்த வகையில் பிரபல யூடியூபரும், சினிமா விமர்சகருமான ப்ளூ சட்டை மாறனும் தனது கருத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், ”ரஜினியை போல 25 வருடம் ரசிகர்கள் தலையில் மிளகாய் அரைத்து.. கடைசியில் கட்சி ஆரம்பிக்காமல் ஓடவில்லை. கமலைப்போல பார்ட் டைம் அரசியலும் செய்யப்போவது இல்லை. அந்த வகையில் அவர்களை விட இவர் எவ்வளவோ மேல். யாருக்கு எதிரான அரசியல் செய்வார்? என்ன கொள்கை என்பதைப்பொறுத்து பாராட்டவோ, விமர்சிக்கவோ படலாம். இனி தமிழக அரசியல் ஸ்டாலின் Vs விஜய் அல்லது உதய் Vs விஜய் எனும் திசையை நோக்கி நகரும்”. என பதிவிட்டுள்ளார்.

author avatar
Archana