தமிழக வெற்றிக் கழகத்தின் குன்னூர் தொகுதி வேட்பாளர் தங்கராஜுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கச் சென்ற தொண்டர்கள் பயணித்த மினி பஸ், எதிர்பாராதவிதமாக 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கோர விபத்தில் படுகாயமடைந்த 21 பேரும் மீட்கப்பட்டு குன்னூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கட்சித் தலைமையையும் தொண்டர்களையும் இந்த அடுத்தடுத்த விபத்துகள் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.
ஏற்கனவே கரூரில் 41 பேர் உயிரிழந்த துயரம் மறைவதற்குள் தஞ்சை, புதுச்சேரி மற்றும் தற்போது குன்னூர் என வரிசையாக தொண்டர்கள் வாகன விபத்துகளில் சிக்கி வருவது அக்கட்சியினரிடையே மிகுந்த கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தொண்டர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில், தண்ணீருக்குப் பதிலாக காய்கறி ஜூஸ் கலந்து பால் பவுடர் புகட்டப்பட்ட 3 மாதக் குழந்தை, உயிருக்கு ஆபத்தான நிலையில்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில், மது போதையில் பெண் ஒருவர் நடுரோட்டில் படுத்துக்கொண்டு ரகளை செய்த வீடியோ சமூக…
உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ…
இந்திய இளம் கிரிக்கெட் நட்சத்திரமான வைபவ் சூர்யவன்சியின் அதிரடியான பேட்டிங் முறை, அவரது மணிக்கட்டு மற்றும் உடலமைப்பில் நீண்ட கால…
லெபனான் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஈரான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மறுபுறம்,…
மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா பட்னாவிஸ் யோகா உடை அணிந்து யோகாசனம் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில்…