காய்கறிகளை விளைநிலங்களில் இருந்து பறித்து அப்படியே விற்பனை செய்த காலம் போய், தற்போது நுகர்வோரைக் கவர அவற்றுக்குச் செயற்கை வண்ணம் பூசும் அதிர்ச்சியூட்டும் அவலம் அரங்கேறி வருகிறது. தற்போது இணையதளத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் சந்தையில் காய்கறி விற்கும் ஒரு நபர் வாளியில் வண்ண கலர் தண்ணியை வைத்துள்ளார். அதில் காய்கறிகளை அனைத்தையும் போட்டு வெளியில் எடுக்கிறார். இதில் அந்தக் காய்கறிகள் பச்சை பச்சை என்று பளபளப்பாக தெரிகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் கொந்தளித்துள்ளனர்.
सब्जियां बेच रहे हैं या रंगाई पुताई का ठेका चला रहे हैं🌶️
सब्जियों को रंग के घोल में गुजारते यह व्यक्ति नजर आ रहा
है लगता हैं अब सब्जियों की ताजगी खेत में नहीं बाल्टियों में
तैयार की जा रही है जो सब्जी अब जितना चमके उतना बड़ा
सवाल भी छोड़ सकती है हमको थाली में पोषण चाहिए पेंटसे… pic.twitter.com/gkqdvAmyon— KUNDAN PATEL (@KUNDAN00PATEL) June 11, 2026
இந்த ஆபத்தான நிலைக்கு யார் பொறுப்பேற்பது என்ற கேள்வி எழும் அதே வேளையில், சட்டரீதியான நடவடிக்கைகளுக்காகக் காத்திருக்காமல் நாமே விழிப்புடன் இருக்க வேண்டியது கட்டாயமாகிறது. சந்தைக்குச் சென்று காய்கறிகளை வாங்கும்போது, அளவுக்கு அதிகமாகப் பளபளப்பாக இருக்கும் காய்கறிகளைத் தவிர்ப்பது நல்லது. மேலும், வாங்கிய காய்கறிகளைச் சமைப்பதற்கு முன்பாக, உப்பு அல்லது வினிகர் கலந்த வெதுவெதுப்பான நீரில் நன்றாகக் கழுவிப் பயன்படுத்துவதன் மூலம் அதன் மேல் ஒட்டியிருக்கும் ரசாயனப் பூச்சுகளை ஓரளவுக்கு அகற்ற முடியும். வணிகர்களின் பேராசைக்கு நம் ஆரோக்கியத்தைப் பலி கொடுக்காமல் இருக்க, நுகர்வோராகிய நாம் ஒவ்வொரு முறையும் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும்.
