பயணிகளே உஷார்..! இனி இப்படி டிக்கெட் எடுக்க முடியாது…அரசு விரைவுப் பேருந்துகளில் மாறப்போகும் முக்கிய நடைமுறை…!!

By Soundarya on ஆனி 11, 2026

Spread the love

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் இனி ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் பெறும் புதிய நடைமுறையைத் தமிழக அரசு விரைவில் கொண்டு வரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் பயணிகள் பேருந்திற்குள் நடத்துனரிடம் நேரடியாக டிக்கெட் பெற முடியாது. எனினும், ஆன்லைன் முன்பதிவு செய்ய முடியாதவர்கள் பேருந்து நிலையங்களில் உள்ள அரசு புக்கிங் சென்டர்களில் நேரடியாக டிக்கெட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

பண்டிகை காலங்கள் மற்றும் வார இறுதி நாட்களில் பேருந்துகளில் ஏற்படும் கூட்ட நெரிசலையும், பயணிகள் எதிர்கொள்ளும் சிரமங்களையும் தவிர்க்கவே இந்த அதிரடி முறை அமலாக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. டிஜிட்டல் மயமாக்கலை ஊக்குவிக்கும் இந்த புதிய திட்டம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.