விஜய் ரசிகர்களுக்கு யாரும் பொண்ணு தராதீங்க, Love கூட பண்ணிடாதீங்க… பரபரப்பை கிளப்பும் வீரலட்சுமி…!

By Nanthini on ஐப்பசி 7, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. அதிமுக மற்றும் திமுக இடையே தான் போட்டி என்ற நிலைமை மாறி தற்போது விஜய் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு விஜயின் தமிழக வெற்றி கழகம் அரசியல் களத்தில் முதல்முறையாக தேர்தலை எதிர்கொள்ள உள்ளது.

இதற்காக கடந்த ஆறு மாதங்களாக விஜய் தீவிர அரசியல் பணியில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக கட்சியில் 2 கோடிக்கும் அதிகமான உறுப்பினர் சேர்க்கை, மாவட்ட வாரியாக வாக்குச்சாவடி குழு கூட்டம் அமைப்பது, மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஆகியவற்றை நடத்தி கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் ஈடுபட்டு வருகின்றார். இதனிடையே சமீபத்தில் கரூரில் விஜய் நடத்திய தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் விஜய்க்கு மிகப்பெரிய சிக்கலாக மாறியுள்ளது. தற்போது அந்த வழக்கை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து விஜய் தீவிர ஆலோசனையில் உள்ளார்.

   

இதனிடையே கரூர் சம்பவத்திற்கு பலரும் தங்கள் எதிர்ப்புகளையும் ஆதரவுகளையும் விஜய்க்கு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் கரூர் துயரத்திற்கு விஜய் ரசிகர்களை காரணம் என்று தமிழர் முன்னேற்ற படைத்தலைவர் வீரலட்சுமி குற்றம் சாட்டியுள்ளார். கரூர் துயரத்திற்கு தண்டனை வழங்கும் வகையில் தமிழக மக்கள் விஜய் ரசிகர்களுக்கு பெண் கொடுக்க மற்றும் வீட்டில் பெண் எடுக்க கூடாது, யாரும் அவர்களை காதலிக்காதீர்கள் என்று வீரலட்சுமி தெரிவித்துள்ளார். விஜய் போல அவரது ரசிகர்களும் தவறான செயல்களிலேயே ஈடுபடக் கூடியவர்கள் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.