போட்டியின்போது திடீரென ராஜா காயை தூக்கி வீசிய நகமுரா… அதிர்ச்சியில் உறைந்த குகேஷ்… வைரலாகும் வீடியோ..!!

By Soundarya on ஐப்பசி 6, 2025

Spread the love

அமெரிக்காவின் டெக்சாஸ் மகாணத்தில் செக்மேட் செஸ் போட்டியானது நடைபெற்று வருகிறது. நேற்று மாலை டெக்சாஸின் ஆர்லிங்டனில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியா- அமெரிக்கா அணியானது மோதியது. இதில் அமெரிக்கா அணி 5-0 வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. நேற்றைய கடைசி ஆட்டத்தில் அமெரிக்க கிராண்ட் மாஸ்டர்  ஹிகாரு நகமுரா இந்திய கிராண்ட் மாஸ்டர் உலக சாம்பியன் குகேஷை தோற்கடித்தார்.

இதனை அடுத்து கிங்கை பிடுங்கி அங்கிருந்து கூட்டத்தின் மீது வீசினார். இதனை பார்த்து ரசிகர்கள் ஆரவாரம் செய்தார்கள். இதனால் அமெரிக்க கிராண்ட் மாஸ்டரின் செயலைக்கண்டு குகேஷ் அதிர்ச்சி அடைந்தார்.