திடீர் திருப்பம்…. விஜய்யால் மாறும் பாஜகவின் கூட்டணி கணக்குகள்…. செம குஷியில் இபிஎஸ் …!

By Nanthini on ஐப்பசி 7, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. அதிமுக மற்றும் திமுக இடையே தான் போட்டி என்ற நிலைமை மாறி தற்போது விஜய் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு விஜயின் தமிழக வெற்றி கழகம் அரசியல் களத்தில் முதல்முறையாக தேர்தலை எதிர்கொள்ள உள்ளது.

இதற்காக கடந்த ஆறு மாதங்களாக விஜய் தீவிர அரசியல் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் பாஜகவின் கூட்டணி ஆட்சி டிமாண்ட், செங்கோட்டையன் போர்க்கொடி போன்றவற்றால் இபிஎஸ் பின்தங்கி இருந்தார். விஜய் ஆதரவு நிலைபாட்டிற்கு பிறகு களத்தில் தமிழக வெற்றி கழகம் கட்சியினர் காட்டும் இணக்கம் இபிஎஸ்-க்கு ஒரு புது எனர்ஜியை கொடுத்துள்ளது. திமிறும் தேமுதிக, உடைந்த பாமகவை விட விஜய் வருகை NDA கூட்டணியை பலப்படுத்தும் என நம்புகிறார். விஜய் பேசும் பொருளானதால் அதிமுக உட்கட்சி பிரச்சனைகள் மறக்கப்பட்டதும் இபிஎஸ்ஸுக்கு சாதகமாக மாறி உள்ளது.

   

விஜயை NDA நெருங்குகிறது என்ற ஊகம் கூட்டணி கணக்குகளை மாற்றியுள்ளது. இபிஎஸ் பிடிவாதத்தால் NDA கூட்டணியில் இருந்து வெளியேறிய டிடிவி தினகரன் விஜயை ஒரு ஆப்ஷனாக முன்னிறுத்தி பாஜகவிடம் தன் பேர வலிமையை காட்டினார். தற்போது விஜய்க்கு ஆதரவாக NDA கூட்டணியில் நடக்கும் நகர்வுகள், டிடிவி தினகரனுக்கான டிமாண்டை குறைத்துள்ளது. இதனால் தனித்து விடப்படுவோமோ என்ற எச்சரிக்கையால் பரம எதிரி திமுக பக்கம் பார்வையை திருப்பி உள்ளதாக கூறப்படுகிறது.