கலைஞர் டிவியில் ஒளிபரப்பான நாளைய இயக்குனர் நிகழ்ச்சியிலும் பங்கு பெற்றார் இயக்குனர் அருண்குமார் . இவர் இயக்கிய குறும்படங்கள் பாராட்டுகளை பெற்ற நிலையில் பண்ணையாரும் பத்மினியும் படத்தை இயக்கும் வாய்ப்பானது அவருக்கு கிடைத்தது. இந்த படத்தில் மிகவும் எதார்த்தமான ஒரு அழகான திரைப்படமாக உருவாக்கி அனைவருடைய பாராட்டுகளையும் பெற்றார் அருண்குமார்.

இதனை தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து சேதுபதி என்ற படத்தையும் இயக்கினார். விஜய் சேதுபதியின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவராக உருவெடுத்தார் அருண்குமார். மீண்டும் மூன்றாவது முறையாக சிந்துபாத் படத்தின் மூலமாக விஜய் சேதுபதியோடு இணைந்தார்.

அதனை தொடர்ந்து நான்கு வருடங்களுக்கு அளித்து அருண்குமார் இயக்கிய திரைப்படம் தான் சித்தா. நடிகர் சித்தார்த் நடிப்பில் கடந்த வருடம் வெளியான இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து விக்ரமை வைத்து இயக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அதன்படி தற்போது சீயான் விக்ரமை வைத்து வீரதீர சூரன் படத்தை இயக்கியுள்ளார் . தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கும் இந்த படம் கண்டிப்பாக வெற்றி படமாக அமையும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று இயக்குனர் அருண்குமார் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்தில் விக்ரம், விஜய் சேதுபதி, சித்தார்த், எஸ் ஜே சூர்யா, விக்னேஷ் சிவன் என பலரும் கலந்து கொண்டு அவரை வாழ்த்தியுள்ளார்கள். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
