இளைஞர்களுக்கு கெளதம் வாசுதேவ் மேனன் கூறிய Love Advice…. இப்படி பண்ணினா work out ஆகுமாம்…

By admin on மாசி 2, 2025

Spread the love

கௌதம் வாசுதேவ் மேனன் தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர் மற்றும் நடிகராவார். தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார் கௌதம் வாசுதேவ் மேனன். 2001 ஆம் ஆண்டு மின்னலே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.

   

தொடர்ந்து காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், என்னை அறிந்தால், விண்ணைத்தாண்டி வருவாயா, நீதானே என் பொன்வசந்தம் போன்ற பல வெற்றி திரைப்படங்களை இயக்கி பிரபலமானார் கௌதம் வாசுதேவ் மேனன்.

   

2010 காலகட்டத்திற்கு பிறகு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய படங்கள் பெரிதாக பேசப்படவில்லை. இவர் ஏற்கனவே 2018 ஆம் ஆண்டு இயற்றிய துருவ நட்சத்திரம் திரைப்படம் சில காரணங்கள் வெளிவராமல் இருந்தது. இந்த வருடம் இந்த திரைப்படம் வெளிவர தயாராக இருக்கிறது என்று அவரே ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.

 

மேலும் ஒரு நேர்காணலில் நிருபர் கௌதம் வாசுதேவ் மேனனின் படங்களில் காதல் அதிகமாக இருக்கும். அதனால் இன்றைய காலகட்டத்து இளைஞர்களுக்கு காதல் அட்வைஸ் தரும்படி கேட்டிருக்கிறார். அதற்கு கௌதம் வாசுதேவ் மேனன் உங்களுக்கு ஒரு பெண்ணை பிடித்திருந்தால் முதலில் ஒரு ஸ்டெப் எடுத்து வைக்க வேண்டும். அவர்களுக்கும் உங்களை பிடித்திருந்தது என்றால் அவர்கள் பார்வை சிரிப்பு ஏதாவது உங்களிடம் ஒரு எக்ஸ்பிரஷனை காட்டி அவர்கள் ஒரு ஒரு ஸ்டெப் எடுத்து வைத்த பிறகுதான் நீங்கள் அடுத்ததாக ஸ்டெப் எடுத்து வைக்க வேண்டும். அப்பொழுதுதான் அது வொர்க் அவுட் ஆகும். கண்டிப்பாக அந்த பெண்ணுக்கு உங்களை பிடித்திருந்தால் அவர்களுடைய செய்கைகள் உங்களுக்கு தனியாக தெரியும் என்று இளைஞர்களுக்கு லவ் அட்வைஸ் கொடுத்திருக்கிறார் கௌதம் வாசுதேவ் மேனன்.