தென்னிந்தியா சினிமா உலகில் 90 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் தான் நடிகை மீனா. இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் அறிமுகமாகி அதன் பிறகு கதாநாயகியாக தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதனிடையில் மீனா வித்தியாசாகர் என்பவரை 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் உள்ளார். இவர் விஜயுடன் தெறி திரைப்படத்தில் நடித்திருந்தார். மீனாவின் கணவருக்கு ஏற்கனவே நுரையீரல் பிரச்சனை இருந்ததால் இரண்டு நுரையீரல்களையும் மாற்ற வேண்டிய அளவுக்கு அவருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. பிறகு இவருடைய உடல் நிலை மிகவும் மோசமாகி சிகிச்சை பலனின்றி கடந்த சில வருடங்களுக்கு முன்பு தான் உயிரிழந்து விட்டார்.

வித்யாசாகரின் இறப்புக்கு பல பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அதேசமயம் மீனாவுக்கு ஆறுதலாக அவருடைய தோழிகள் தான் இருக்கிறார்கள். கணவரின் இறப்பிலிருந்து மீண்டு வந்த மீனா தற்போது மீண்டும் படங்களில் நடித்துக்கொண்டோம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றும் வருகிறார். இப்படியான நிலையில் நடிகை மீனா குறித்து பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசியுள்ளார். அதில், நான் மீனாவை பேபி மீனா என்று தான் சொல்வேன். சின்ன வயசுல இருந்து எனக்கு அவங்கள நல்லாவே தெரியும். எனக்கு ஒரு 12 வயசு இருக்கும்போது அவங்களுக்கு எட்டு வயசு இருக்கும்.

அப்பவே ரொம்ப துரு துருனு இருப்பாங்க. சின்ன வயசுல நடிக்கும் போது ஏதாவது ரெண்டு டேக் எடுத்துட்டாங்கனா மீனாவோட அம்மா அவங்கள அடிச்சிடுவாங்க. அந்த வயசுல ஒண்ணுமே அறியாத மீனா என்னால நடிக்க முடியாது போ என்று கோச்சிக்கிட்டு போயிடுவாங்க. உடனே எங்க அப்பா மீனாவோட அம்மாவை கூப்பிட்டு சின்ன பிள்ளையை எதுக்கு இப்படி அடிக்கிற அவங்க கிட்ட சாதுவா தான் பேசணும் என்று சொல்வாரு. எப்பவுமே மீனா ஓட ஷூட்டிங் என்றால் நிறைய சாக்லேட் வாங்கி வச்சிருவாரு. அந்த காலத்துல ஒரு நாளைக்கு பத்து சாக்லேட் கொடுத்து தான் மீனா கிட்ட வேலையே வாங்க முடியும். சின்ன வயசா இருக்கும்போதே சொல்றத கேட்டு அவ்வளவு அருமையான நடிப்பாங்க.

குழந்தை நட்சத்திரமாக நடித்துக் கொண்டிருந்த மீனாவுக்கு 13 வயசு ஆகும்போது ஹீரோயினியாகவும் நடிக்க முடியாமல் குழந்தையின் நட்சத்திரமாகவும் நடிக்க முடியாமல் நடுத்தரத்தில் இருந்த சமயத்தில் மீனாவின் அம்மா எங்க அப்பாவை சந்திக்க ஆபிசுக்கு வருவாங்க. இப்போ ஒண்ணுமே சமாளிக்க முடியல என்று சொன்னதும் எங்க அப்பா இந்த பொண்ணு வருங்காலத்தில் தமிழ் சினிமாவை வியக்கும் அளவுக்கு பெரிய நடிகையா வருவாங்க என்று சொல்லி அனுப்புவார். அன்னைக்கு அவர் சொன்ன மாதிரியே தமிழ் சினிமாவுல அத்தனை நடிகர்களுடைய ஜோடி போட்டு நடித்து ஒரு கலக்கு கலக்கி விட்டார் மீனா என்று பாலாஜி பிரபு பேசியுள்ளார்.
