Categories: சினிமா

‘வீடு சிறுசு தான் ஆனா உங்க மனசு பெருசு’…. ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ பிரபல நடிகைக்கு வாழ்த்துக்களை கூறும் ரசிகர்கள்…

Spread the love

தொகுப்பாளராக தனது திரைப்பயணத்தை தொடங்கிய விஜே  தீபிகா ‘பாண்டியன் ஸ்டோர்’ சீரியல் மூலம் அனைவருக்கும் அறிமுகமானார். தற்பொழுது அவர் புது வீடு ஒன்றை கட்டியுள்ளார். அதை குறித்து ஒரு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அது தற்பொழுது வைரலாகி  வருகிறது.

கிராமத்து பின்னணியை  கொண்ட விஜே  தீபிகா தற்பொழுது எளிமையாக கட்டி இருக்கும் வீட்டை கண்டு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.  விஜே  தீபிகா சிறுவயதிலிருந்து தொகுப்பாளராகவும் நடிகையாகவும் ஆக வேண்டும் என்று ஆசை.

ஆனால் அவர் வீட்டில் அதற்கு சம்மதிக்கவில்லை ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தின் ஷூட்டிங்கில்  ஒரு சிறு கதாபாத்திரத்தில்  நடிக்க ஆடிஷன் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு செலக்ட் ஆனார் .வீட்டில் சம்மதம்  தெரிவிக்கவில்லை.

பின்னர் அவருடைய விடாமுயற்சியினால் தொகுப்பாளரான  விஜே தீபிகா நாடகங்களில் நடிக்க வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தார். அப்பொழுதுதான் அவரை தேடி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் வாய்ப்பு வந்தது. இதை பயன்படுத்திக் கொண்ட அவர், கண்ணனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா          கதாபாத்திரத்தில் அறிமுகமானார்.

இந்த கதாபாத்திரத்தில் மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். ஆனால் மேக்கப் அவர முகத்துக்கு ஒத்து வராத காரணத்தினால் முகத்தில் பருக்கள் வர ஆரம்பித்தன. முகத்தை சரி செய்து கொள்ளுமாறு  சீரியல் தரப்பில் கூறப்பட்டது.

ஆனால் அவரால் முடியவில்லை. எனவே அவர் அந்த சீரியலில் இருந்து விலகி விட்டார். இப்பொழுது சிகிச்சை எடுத்துக் கொண்ட  தீபிகா பழைய நிலைக்கு திரும்பியுள்ளார். கலர்ஸ் தமிழில் பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய தீபிகா சொந்தமாக யூடியூப் சேனலும் வைத்துள்ளார். தனது வாழ்க்கை குறித்து ஒவ்வொரு சின்ன சின்ன நிகழ்வுகளையும் அந்த சேனலில் பகிர்ந்து வருகிறார். அதுபோல  தற்போது அவர் கட்டியுள்ள புது வீட்டை பற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவின் ஒவ்வொரு இடத்திலும் அவர் தன்னுடைய அம்மா அப்பாவின் மீது வைத்திருக்கும் பாசத்தையும் ,அவர்களுடைய கனவுகளையும் பற்றி குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் ‘நீங்கள் கட்டியிருக்கும் வீடு சிறிது தான் ஆனால் உங்க மனசு ரொம்ப பெருசு’ என்று அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Begam

Recent Posts

பிஞ்சு என்றும் பாராமல் குழந்தையை சுவரில் மோதி கொன்ற கொடூரன்..! தாயை திருமணம் செய்ய குழந்தை தடையாக இருந்ததால் வெறிச்செயல்..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே, குடும்பப் பகை மற்றும் பழிவாங்கும் நோக்கத்தில் ஒரு வயது ஆண் குழந்தை கொடூரமான முறையில்…

2 minutes ago

தவெகவுக்கு ஆதரவு…. திமுக கூட்டணியில் இருந்து விலகல்?… முதல்வர் விஜய்யை சந்தித்த பின் துரை வைகோ போட்ட குண்டு….புதிய பரபரப்பு….!

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 தொகுதிகளில் அபார வெற்றி…

8 minutes ago

“ஆளுநருக்காக நாங்க ஏன் காக்கணும்..?” பிரசவ வலி மனைவியுடன் டிராஃபிக்கில் சிக்கிய கணவனின் ஆவேசக் கேள்வி…! நெட்டிசன்கள் கடும் கொந்தளிப்பு..!

ஆளுநரின் வாகனக் கடந்து செல்லும் நிகழ்விற்காகப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், பிரசவ வலியால் அவதிப்பட்ட தன் கர்ப்பிணி மனைவியுடன் கணவர் ஒருவர்…

14 minutes ago

பாஜகவில் விரிசல்..? அண்ணாமலையின் புதிய கட்சி திட்டத்திற்குப் பின்னால் இருக்கும் நபர் யார்..? சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் கூட்டணி…!!

பாஜக தலைவர்களில் ஒருவரான அண்ணாமலை, கட்சியில் இருந்து தனக்கு ஏற்பட்டுள்ள சில அரசியல் அதிருப்திகள் காரணமாக, பாஜகவிலிருந்து விலகி புதிய…

15 minutes ago

ஒடிசாவில் அதிர்ச்சி.. காதலை நிராகரித்த பெண்.. ஆபீஸின் லேடிஸ் டாய்லெட்டில் ஸ்பை கேமரா வைத்த அதிகாரி கைது…!

ஒடிசா மாநிலம் ஜெகத்சிங்பூரில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (DRDA) அலுவலகத்தில் பணியாற்றிய சஞ்சய் அடேகா என்ற இளநிலை…

36 minutes ago

“என் மனைவி கர்ப்பிணி..!” ஆளுநர் வருகைக்காக நிறுத்தப்பட்ட போக்குவரத்து.. நடுச்சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட கணவன்.. பெங்களூருவில் பரபரப்பு…!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஓல்ட் ஏர்போர்ட் சாலையில், அம்மாநில ஆளுநரின் பாதுகாப்பு வாகனங்கள் கடந்து செல்வதற்காக சுமார் 30…

45 minutes ago