“அந்த ஒரு பதிவு” தவெக கூட்டணியை உறுதி செய்தது விசிக…? தமிழக அரசியலில் பரபரப்பு…!!

By Soundarya on வைகாசி 9, 2026

Spread the love

விசிக (VCK) கட்சியின் தலைவர் திருமாவளவன் அக்கட்சியின் அரசியல் நிலைப்பாட்டை இன்று அறிவிக்க உள்ள சூழலில், அக்கட்சியைச் சேர்ந்த வன்னி அரசு வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எங்களை ஓரங்கட்டவோ அல்லது ஒதுக்கவோ நினைத்தாலும், நாங்களே மையப்புள்ளி என்பதைத் தீர்மானிப்போம் என்று அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், திருமாவளவனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் வன்னி அரசு பகிர்ந்துள்ளார். இந்தப் பதிவானது தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) விசிக கூட்டணி அமைப்பதை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது. அரசியலில் நிலவும் இத்தகைய நகர்வுகள் தற்போதைய கூட்டணிக் கணக்குகளில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.