“மன உளைச்சலா இருக்கு” தூக்கமே வர மாட்டேங்குது… விஜய் வீட்டு வாசலில் கதறி அழுத கர்ப்பிணி பெண்..!!

By Soundarya on வைகாசி 9, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த நிலையில், ஆட்சி அமைப்பதற்கான அரசியல் நகர்வுகள் தீவிரமடைந்துள்ளன. காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் 113 எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை ஆளுநரிடம் சமர்ப்பித்தும், பெரும்பான்மைக்கு இன்னும் சில இடங்கள் தேவைப்படுவதால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கிறது. இந்தச் சூழலில், விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்க வேண்டும் என்பதில் அவரது தொண்டர்களும் பொதுமக்களும் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

இந்த பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே, பூந்தமல்லியைச் சேர்ந்த வினோதினி என்ற எட்டு மாத கர்ப்பிணிப் பெண், நீலாங்கரையில் உள்ள விஜய்யின் இல்லத்தின் முன்பு அமர்ந்து கண்ணீர் விட்டு அழுத சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவயது முதலே விஜய்யின் தீவிர ரசிகையான இவர், ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் பார்த்தது முதல் அவர் மீது மிகுந்த அன்பு கொண்டவர் என்றும், அவர் முதலமைச்சராக வேண்டும் எனப் பல்வேறு கோயில்களில் பிரார்த்தனை செய்ததாகவும் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

   

விஜய்க்காக கடிதங்கள் மற்றும் ஒரு பரிசுப் பொருளை ஏந்தி வந்த அந்தப் பெண், தனது தனிப்பட்ட வாழ்க்கையில் சந்தித்து வரும் துயரங்களையும் அங்கிருந்தவர்களிடம் பகிர்ந்து கொண்டார். தனது கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாகவும், இதனால் தான் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி தூக்கமின்றித் தவிப்பதாகவும் அவர் கண்ணீர் மல்கக் கூறினார். மேலும், தனது குடும்பத்தினர் தன்னை மனநலம் பாதிக்கப்பட்டவள் என்று கூறுவதாகக் கூறி அவர் வேதனைப்பட்டார்.

   

விஜய்யைச் சந்தித்துத் தனது கடிதத்தை ஒப்படைப்பதன் மூலம், அவர் தனது கணவரை அழைத்து எச்சரித்துச் சிறையில் அடைக்க வேண்டும் என்றும், தன்னை வீட்டில் பாதுகாப்பாகப் பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஒரு அரசியல் தலைவராகவும், தனது அபிமான நடிகராகவும் விஜய்யிடம் நீதி கேட்டு ஒரு கர்ப்பிணிப் பெண் வாசலில் அமர்ந்து அழுத இந்தக் காணொளி, தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி விவாதத்தைக் கிளப்பியுள்ளது.