தென்னிந்திய சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக திகழும் அட்லீ இயக்கத்தில் வெளியான தெறி திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் பேபி ஜான் திரைப்படம். அட்லியின் பிறை வாழ்வில் அவருடைய இரண்டாவது படம் தான் தெறி. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதில் விஜயின் மகளாக நடிகை மீனாவின் மகள் நடித்திருப்பார். தற்போது அட்லீ பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வரும் நிலையில் ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்திருந்தார். அதன் பிறகு இந்தி திரை உலகில் தன்னுடைய தெறி படத்தை ரீமேக் செய்து அதனை தானே தயாரித்து வெளியிடவும் செய்தார். அவரது இயக்கத்தில் அடுத்ததாக நடிகர் சல்மான்கான் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இவர்கள் இருவரையும் வைத்து பான் இந்தியா படம் எடுக்க அட்லி திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இப்படியான நிலையில் பேபி ஜான் படத்தில் சல்மான் கான் கேமியோ ரோலில் நடித்துள்ளார். மேலும் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க சல்மான் கான் சம்பளமே வாங்கவில்லை என்றும் கூறப்படுகின்றது. பேபி ஜான் திரைப்படம் மூலமாக தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து உள்ள அட்லி இப்பட மூலம் இந்தி திரை உலகில் காலடி எடுத்து வைத்துள்ளார் கீர்த்தி சுரேஷ். படத்தைப் பார்த்த பலரும் பாராட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் விவரம் வெளியாகி உள்ளது. படம் முதல் நாளில் சுமார் 12.50 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வருண் தவானுக்கு கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்துள்ள மிகப்பெரிய ஓபனிங் என கூறப்படுகின்றது. இந்த தகவலை தெரிந்து கொண்ட விஜய் ரசிகர்கள் பேபி ஜான் பட குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.